ரோஜா சீரியலில் கடலில் தொலைந்து போன ரோஜாவை அர்ஜூன் சார் இன்று சந்திக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ரோஜா. தற்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியலாகும். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ரோஜா சீரியலின் முதல் எபிசோட் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. தற்போது 1000 எபிசோட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
1 கோடி போச்சு.. அதிர்ச்சியில் ராஜா ராணி 2 அர்ச்சனா!
இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். இருவருமே ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்து விட்டனர். குறிப்பாக ரசிகர்கள் இவர்களின் ஆன் ஸ்கீரின் ஜோடியை தூக்கி கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு நிகராக இந்த சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், சண்டை, லவ், ரொமான்ஸ், கிரைம் என சென்று கொண்டிருக்கிறது.
உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!
தற்போது கதைப்படி நடுக்கடலில் கல்லை கட்டி வீசப்பட்ட ரோஜா உயிர் பிழைத்து விட்டார். ஆனால் அவர் கரை ஒதுங்கியது சின்ன கிராமத்தில். அங்கு இருப்பவர்கள் அவரை காப்பாற்றி சொந்த மகள் போல் வளர்த்து வருகிறார்கள். ரோஜாவை தேடி எல்லா இடங்களிலும் அர்ஜூன் அலைகிறார். ரோஜா கர்ப்பமாக இருப்பதால் தினம் தினம் அவரை நினைத்து கண்ணீர் விடுகிறார்.ரோஜாவை கண்டுப்பிடிக்க ஜெஸிக்கா என்ற போலீஸ் அதிகாரி அர்ஜூனுக்கு உதவி செய்கிறார். அவரும் பார்ப்பதற்கு ரோஜா போலவே இருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோ வெளியாகியுள்ளது. இதில் குப்பத்தில் இருக்கும் ரோஜாவை அர்ஜூன் பார்த்து விடுகிறார். ஆனால் ரோஜாவுக்கு பழைய நினைவுகள் எல்லாமே மறந்து போனதால் அர்ஜூனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. ரோஜாவை பார்த்து ஆனந்த கண்ணீரில் கையில் வைத்திருக்கும் தாலியை எடுத்து காட்டி எல்லா கதையையும் அர்ஜூன் சொல்கிறார்.
ஆனால் ரோஜா பழைய விஷயங்கள் எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை என சொல்லி விடுகிறார்.ரோஜா காலில் விழுந்து அர்ஜூன் கெஞ்சுகிறார். அடுத்து ரோஜா என்ன சொல்ல போகிறார்? அர்ஜூன் உடன் வீட்டுக்கு செல்வாரா? சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் வெயிட்டிங்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.