Home /News /entertainment /

ரசிகர்களின் கோரிக்கையை மதித்த நடிகர்.. ரோஜா அர்ஜூன் சொன்ன குட் நியூஸ்!

ரசிகர்களின் கோரிக்கையை மதித்த நடிகர்.. ரோஜா அர்ஜூன் சொன்ன குட் நியூஸ்!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

ஒரு சீரியல்  நடிகரின் விலகல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

    ரோஜா சீரியலில் அர்ஜூனாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கோரிக்கையை மதித்து சீரியலில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்

    சன் டிவி டி.ஆர்.பியில் சக்கை போடு போடும் சீரியல் ரோஜா. இதில் அர்ஜூனாக நடிப்பவர் நடிகர் சிபு சூர்யன். சின்னத்திரையில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருக்கும் சிபு சூர்யனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். இந்த சீரியல் ஒளிப்பரப்பான கொஞ்ச நாளிலே சிபு சூர்யன் இன்ஸ்டாகிராமை அதிகப்படியான ரசிகர்கள் பின் தொட தொடங்கினர். குறிப்பாக பெண்கள். இவரின் ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் லைக்ஸ் குவிய தொடங்கியது. ரோஜா - அர்ஜூன் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் பயங்கரமாக வொர்க்கவுட் ஆக சீரியல் டாப் ரேங்கில் வர தொடங்கியது.

    கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!

    ரோஜாவுடன் திருமணம், அனுவின் சூழ்ச்சி, டைகர் மாணிக்கத்துடன் சண்டை, ரோஜாவின் டி.என்.ஏ டெஸ்ட் என சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்றது. தற்போது சீரியல் கதைப்படி ரோஜா கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு வளைக்காப்பு நடைபெறவுள்ளது. இப்படி சிரியல் விறுவிறுப்பாக செல்ல சில தினங்களுக்கு முன்பு சீரியலின் ஹீரோ சிபு, ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் அர்ஜூனாக நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள், ப்ளீஸ் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

    பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

    தொடர்ந்து இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் அர்ஜூன் சார்பாக ஹாஷ்டேக்குகளும் பதிவிடப்பட்டன. ஒரு சீரியல்  நடிகரின் விலகல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என சின்னத்திரையே ஆச்சரியத்தில் பார்த்தது. இந்நிலையில் இதை எல்லாம் பார்த்த  சிபு சூர்யன் நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.




    அதில் ரசிகர்களின் இவ்வளவு அன்பை பார்த்து என்னால் அதை நிராகரிக்க முடியவில்லை. ரோஜா சீரியலில் இருந்து விலகும் என முடிவை ரசிகர்களின் அன்புக்காக மறுபரிசீலனை செய்கிறேன் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிபுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி