கமல்ஹாசனிடம் இருந்து வந்த அழைப்பின் பேரில் அவரை பார்க்க சென்ற கமலின் தீவிர ரசிகரான ரோபோ ஷங்கருக்கு அன்பு முத்தம் பரிசாக கிடைத்துள்ளது.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை பிரபலமாக மாறி இருக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு? நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். நடிகர் விஜயகாந்த் போல் பேசி, நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது வெள்ளித்திரை பிளஸ் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரோபோ, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.
’சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்.. ரஜினி - ஷங்கர் திடீர் சந்திப்பு!
ரோபோ ஷங்கர் தீவிரமான நடிகர் கமல் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தன்னை கமல்ஹாசன் பக்தன் என்றே கூறி கொள்வார். அவர் படங்களை பார்த்து தான் சினிமா மீது ஆசை வந்ததாக பல இடங்களில் ரோபோ பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லை கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவரின் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஆசி வாங்குவார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று கற்பூரம் ஏற்றி தியேட்டரில் அதகளம் செய்தார்.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
இந்நிலையில் ரோபோ ஷங்கருக்கு திடீரென்று கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பதறி போனவர் சந்தோஷம் கலந்த பயத்தில் சென்னை ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது கமல்ஹாசன் அவரை அழைத்து பேசி நலம் விசாரித்து இருக்கிறார். சந்திப்பின் இறுதியில் கமலின் பக்தர், ரோபோவுக்கு அன்பு முத்தத்தை பரிசாக தந்துள்ளார் உலகநாயகன்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ரோபோவின் ட்விட்டர் பக்கத்தில் கவர் ஃபோட்டோவில் கூட கமலுடன் அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இருக்கும். இந்நிலையில் கமலிடம் இருந்து இப்படியொரு பரிசு ரோபோவுக்கு கிடைத்திருப்பது சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.