ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் ரோபோ ஷங்கர். கிளைமேக்ஸை நெருங்கும் செம்பருத்தி சீரியலை கலகலப்பாக முடித்து வைக்கும் பொறுப்பு ரோபோ ஷங்கரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1400 எபிசோடுகளை கடந்து மெகா ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த சீரியலில் பார்வதி - ஆதி ரோல் மற்றும் அகிலாண்டேஸ்வரி ரோல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பல ட்விஸ்டுகளுக்கு பிறகு இப்போது சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடுவில் ஆதியாக நடித்த கார்த்திக் சீரியலில் இருந்து விலகினார். அதன் பின்பு ஆதியாக ஆங்கர் அக்னி நடித்து வருகிறார். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியலை சிரிப்புடன் முடித்து வைக்க போகிறார் நடிகர் ரோபோ ஷங்கர்.
கோதை மருமகள்களின் திடீர் மாற்றம்... ஷாக் கொடுத்த வசு - சரஸ்வதி!
கதைப்படி இப்போது புவனேஸ்வரி வீட்டில் அகிலாண்டேஸ்வரி இருக்கிறார். அதே போல் அகிலாண்டேஸ்வரி வீட்டில் புவனேஸ்வரி இருக்கிறார். இருவரும் இப்படி மாறி மாறி நடித்து வரும் நிலையில், புவனேஸ்வரியின் கணவராக என்ட்ரி கொடுக்கிறார்
ரோபோ. இவர், புவனேஸ்வரி வீட்டுக்கு பூஜை செய்யும் சாமியார் போல் வருகி்றார். அதன் பின்பு புவனேஸ்வரியை பார்த்ததும், நான் தான் உன்னுடைய கணவன் என சாமியார் வேஷத்தை கலைக்கிறார். ஆனால் அவருக்கு புவனேஸ்வரியாக நடிப்பது அகிலாண்டேஸ்வரி என்ற உண்மை தெரியாது. மனைவி என்ற உரிமையில் நெருங்கி நெருங்கி பேச, அகிலாண்டேஸ்வரி ஓடி போகிறார்.
இந்த காமெடி ட்ராக் செம்பருத்தி சீரியலுக்கு புதுசு. எப்போதுமே பரபரப்புடன், வில்லி, சண்டை என கதை நகரும். ஆனால் கிளைமேக்ஸ் நகைச்சுவையாக மக்கள் வயிறு குலுங்கி சிரிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சீரியல் குழு ரோபோ ஷங்கரை களத்தில் இறக்கியுள்ளது.
ரோபோ ஷங்கரின் என்ட்ரி குறித்த புரமோ இணையத்தில் வைரலானது.ரோபோவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த புரமோ வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். இவ்வளவு பெரிய மெகா ஹிட் சீரியலை கலகலப்பாக முடித்து வைக்கும் பொறுப்பு ரோபோ ஷங்கரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கம் போல் ரோபோ பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் பெரும் ஆர்வத்துடன் ரசிகர்கள் சீரியலை பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.