• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒரே ஒரு ஃபோட்டோவால் இணையத்தை பேச வைத்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா!

ஒரே ஒரு ஃபோட்டோவால் இணையத்தை பேச வைத்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா!

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

சிங்கப்பெண் திரும்பி வந்து விட்டார் என்று அவரை ஊக்கப்படுத்தும் வகையில் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

  • Share this:
    சர்வைவர் போட்டிக்கு பங்கேற்க செல்லும் முன், பங்கேற்ற பின் என்று தனது முகத்தில் தெரியும் வேறுபாடுகளை காட்ட கூடிய போட்டோவுடன் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார் இந்திரஜா.

    ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து தமிழ் டிவி சேனல்கள் நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் உலக புகழ் பெற்ற சர்வைவர் ரியாலிட்டி ஷோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் சினிமா பிரபலங்களும் பங்கேற்று உள்ளனர். நடிகை விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, நடிகர் நந்தா, விஜே பார்வதி, நடிகர் விக்ராந்த், பெசன்ட் ரவி, நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, இளம் நடிகர் சரண், லக்ஷ்மி பிரியா, நடிகர் நாராயண் லக்கி, லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான், ராம் சி, ஐஸ்வர்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

    இவர்களுடன் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். எனினும் தற்போது எலிமினேட் ஆகி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனிடையே தனது இன்ஸ்டாவில் சர்வைவர் போட்டிக்கு பங்கேற்க செல்லும் முன், பங்கேற்ற பின் என்று தனது முகத்தில் தெரியும் வேறுபாடுகளை காட்ட கூடிய போட்டோவுடன் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். இந்த போட்டோவை ஷேர் செய்து இருக்கும் இந்திரஜா சங்கர் "என் முகம் கருத்து விட்டது, தலை முடி உதிர்ந்துள்ளது, காயங்கள் ஏற்பட்டுள்ளது இன்னும் பல மாற்றங்கள்.. ஆனாலும் எனது இந்த தோற்றத்தையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் சர்வைவர் ஷோ எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்து உள்ளது. மிஸ் யூ சர்வைவர்" என்று எழுதி இருக்கிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)






    இந்த போட்டோ மற்றும் போஸ்ட்டை பார்த்த அவரது ஃபாலோயர்கள் மற்றும் ரசிகர்கள், ”உண்மையாக சொல்வது என்றால் நீங்கள் மிகவும் மெச்சூரிட்டி உள்ளவர் மற்றும் தைரியமானவர் !! உங்கள் வயதில் நான் நிச்சயமாக நாங்கள் இந்த அளவிற்கு மெச்சூரிட்டியாக இல்லை.. நீங்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது வாழ்த்துகள் ”என்று கூறி இருக்கிறார்கள். வேறு சில ரசிகர்கள் ”நீங்கள் எப்படி இருந்தாலும் அழகி தான். உடலில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறி விடும்.

    சர்வைவர் ஷோவில் உங்களால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளீர்கள், வேற லெவல் பர்ஃபார்மென்ஸ், சிங்கப்பெண் திரும்பி வந்து விட்டார்” என்று அவரை ஊக்கப்படுத்தும் வகையில் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்ட்ரில் கால்பந்து வீராங்கனையாக நடித்த இந்திரஜா சங்கர், ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: