Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வைபவ் நடிப்பில் வெளிவந்த ’ஆர்.கே. நகர்’ !

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வைபவ் நடிப்பில் வெளிவந்த ’ஆர்.கே. நகர்’ !

ஆர்.கே நகர்

ஆர்.கே நகர்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஆர்கே நகர் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க தயாராகுங்கள்.

  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வைபவ் நடிப்பில் வெளிவந்த ஆர் கே நகர் திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிப்பரப்புகிறது. இந்த அதிரடி திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியரை கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த ஞாயிறு (நாளை) ஜுலை 3 பிற்பகல் 2:00 மணிக்கு கண்டு மகிழுங்கள். 

  அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளும் நிறைந்த ஆர்கே நகர் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க தயாராகுங்கள். குற்றங்கள் தினசரி நிகழ்வுகளாக நடைபெறும் நிழல் உலகத்தை பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதை, பார்வையாளர்கள் கவனத்தை சிறிதளவும் சிதறவிடாமல் முழுமையாக தன்வசப்படுத்தும் என்பது நிச்சயம். அரசியல், ரொமான்ஸ், டிராமா மற்றும் நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து அதிரடி திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மிக நேர்த்தியாக இத்திரைப்படம் சித்தரிக்கிறது.

  பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!

  திரு. சரவணராஜன் இயக்கத்தில் 2019 – ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை சனா அல்தாஃப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகை அஞ்சனா கீர்த்தி, நடிகர் சம்பத் ராஜ், நடிகர் இனிகோ பிரபாகரன் ஆகியோர் முக்கிய துணைக்கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் கதை, தனது அன்றாடப் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய கடும் சிரமப்படும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதியின் மகள் மீது இந்த இளைஞன் காதலில் விழும்போது அவனது வாழ்க்கை ஒரு சிறப்பான திருப்பத்தை நோக்கி நகர்கிறது. ஆனால் அவனது மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காதவாறு ஒரு கொலை வழக்கில் அவன் சிக்குகிறபோது கதை சூடுபிடிக்கிறது.

  கனவு காணும் ஒரு நிகழ்வின் வழியாக கதையில் அறிமுகம் செய்யப்படும் சங்கர் (நடிகர் வைபவ்), ஒரு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை வாழ்வதாக கற்பனை செய்கிறான். எனினும், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாக ஆகின்றனர். ஆனால், ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றனர் என்று நம்புகின்ற சங்கருக்கு பணக்காரர்கள் மீது மதிப்போ, மரியாதையோ இல்லை. எனினும், சில ரௌடிகளை துரத்திக்கொண்டு சங்கர் ஓடுவதை ரஞ்சனி (நடிகை சனா அல்டாஃப்) பார்க்கும்போது அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவன் மீது விழுகிறது.

  மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

  ரௌடிகளையும், குண்டர்களையும் வெறுக்கின்ற தனது அதே கண்ணோட்டமே சங்கரிடமும் இருக்கிறது என்று நினைக்கின்ற ரஞ்சனிக்கு சங்கர் மீது மதிப்பு வருகிறது. அவர்களது உறவு வளர்ச்சியடையும்போது விஸ்வநாதன் என்று லோட்டை (சம்பத் ராஜ்) மற்றும் மனோஜ் என்ற மன்னு (இனிகோ பிரபாகரன்) என்ற இரு எதிரிகள் மோதலில் ஈடுபடுகின்றனர். இவர்களது மோதலின் காரணமாக சங்கரின் தையற்கதையில் மிகப்பிரபலமான ஒரு நபர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை குற்றச்சாட்டு சங்கர் மீது விழுகிறது. குற்றமிழைக்காத நபர் என்று தன்னை சங்கர் எப்படி நிரூபிக்க போராடுகிறார் என்று கதையின் எஞ்சிய பகுதி சொல்கிறது.  இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. சரவண ராஜன் இதுகுறித்து பேசுகையில், “கலர்ஸ் தமிழ் போன்ற மிகப்பிரபலமான சேனலில் எனது திரைப்படம் ஒளிபரப்பப்படுவது உள்ளபடியே எனக்கு பெருமகிழ்ச்சி. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவதோடு, அவர்களுக்குப் பிடித்த திரைக்காவியமாக இருக்குமென்று நான் நம்புகிறேன். இதன் கதாபாத்திரங்கள், கதை மற்றும் திரைப்பட இசை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இத்திரைப்படத்தை உயிரோட்டமானதாக ஆக்குவதில் வெற்றியடைந்திருக்கின்றன. பிரேம்ஜியின் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு அதிக வலு சேர்க்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் வரும் ஞாயிறு குதூகலமான நாளாக அமையும் என்று நான் நம்புகிறேன். இத்திரைப்படத்தை உருவாக்க நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகள் பாராட்டப்படும் என்றும் நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.

  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Movie, Television

  அடுத்த செய்தி