Reshma Pasupuleti: சன் டிவி சீரியலுக்கு குட் பை... ரேஷ்மாவின் திடீர் முடிவு

ரேஷ்மா

சமீபத்தில் தான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிஃபருக்கு பதில் ரேஷ்மா மாற்றப்பட்டார்.

  • Share this:
    நடிகை ரேஷ்மா பசுபலேட்டி சன் டிவி-யில் ‘அன்பே வா’ சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா. அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். அதோடு வெள்ளித்திரையில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

    இதையடுத்து ரேஷ்மா நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படம் அவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    ரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வந்தனா என்ற ரோலில் நடித்து வந்தார் ரேஷ்மா. தற்போது அதிலிருந்து அவர் விலகியுள்ளார்.

    சமீபத்தில் தான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிஃபருக்கு பதில் ரேஷ்மா மாற்றப்பட்டார். ஆகவே கால்ஷீட் பிரச்னையால், அன்பே வா சீரியலில் இருந்து அவர் விலகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: