பொறாமைப்பட வைக்கும் காதல்... ரேஷ்மா - மதன் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்!

ரேஷ்மா -மதன்

மதன் பாண்டியன் பிறந்தநாளுக்கு சின்னத்திரையில் உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் வாழ்த்துகளை தெரிவித்தனர்

 • Share this:
  அபி டெய்லரில் நடித்து வரும் மதன் பாண்டியன் தனது பிறந்த நாள் விழாவை காதலி ரேஷ்மா மற்றும் சக நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

  சின்னத்திரையில் ரியல் மற்றும் ரீல் ஜோடியாக மதன் பாண்டியன் - ரேஷ்மா இருந்து வருகின்றனர். காதலர்களாக இருக்கும் இருவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லரில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக்ஸ்ட் 23 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய மதனை, காதலி ரேஷ்மா, செம்பருத்தி புகழ் ஷாபனா, பாக்யலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான ஆர்யன் ஆகியோர் நேரில் வாழ்த்தியுள்ளனர்.

  பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மதன் பாண்டியன், "என்னுடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த நாள் மிகவும் மிகழ்ச்சிகரமானதாக இருந்தது. நீங்கள் இருந்ததால், அந்த நாள் மகிழ்ச்சியாக இருந்தது என்பது தான் உண்மை. இதே அன்பு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் ஒன்றாக பயணிப்போம், உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி" என உணர்ச்சிப் பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல், மதன் பாண்டியன் பிறந்தநாளுக்கு சின்னத்திரையில் உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவருடைய ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை லைக்குகளாகவும் கமெண்டுகளாவும் பதிவிட்டு மதனை வாழ்த்தியுள்ளனர். தற்போது 'அபி டெய்லர்' சீரியலில் அசோக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அபிராமி கதாப்பாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  @iamMadhanpandian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@madhanpandian)


  இந்தக் கதையைப் பொறுத்தவரையில், சிறிய நகரம் ஒன்றில் டெய்லராக வாழ்க்கையை நடத்தும் துடிப்பான பெண்ணாக அபிராமி இருக்கிறாள். அவருடைய தந்தை சுந்தரமூர்த்தி (படவா கோபி) குடிகாரராக இருக்கிறார். இளம் வயது தங்கை இருப்பதால் வாழ்வாதாரத்துக்காக குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய நிலை அபிராமிக்கு ஏற்படுகிறது. இதனால், தான் வசிக்கும் இடத்திலேயே டெய்லர் கடை ஒன்றை தொடங்கி, படிப்படியாக முன்னேறுவதற்கு முயற்சி செய்யும் அபிராமிக்கு, தொழில் ரீதியாக போட்டி ஏற்படுகிறது. அதாவது, அசோக் (மதன் பாண்டியன்), அபிராமி கடை வைத்திருக்கும் பகுதியிலேயே ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். இதில் இருவருக்கும் இடையே போட்டி, மோதல் உருவாகி காதலாக மலர்கிறது. இந்த சுவாரஸ்யமான பின்னணியில் அபிடெய்லர் சீரியல் பயணிக்கிறது.

  இவர்கள் இருவரும் ஏற்கனவே பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்து நடித்திருக்கின்றனர். சீரியலில் இணைந்து நடிப்பது குறித்து மதனும், ரேஷ்மாவும் அண்மையில் பேசும்போது, வேலையில் அவரவர் திறமையை காட்டுவதற்கு கடுமையாக போராடுவோம். எங்களுக்கு நாங்களே விமர்சித்துக்கொள்வோம். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதில் தீர்க்கமாக இருப்போம். போட்டியாக எடுத்துக்கொள்வோமே தவிர ஒருபோதும் பொறாமைபட்டத்தில்லை எனத் தெரிவித்திருந்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: