• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருமண பந்தத்தில் இணைந்த பிரபல சீரியல் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து!

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல சீரியல் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து!

ரேஷ்மா - மதன்

ரேஷ்மா - மதன்

திருமண வாழ்வில் ஜோடி சேரும் முன்பே இருவரும் சின்னத்திரையில் இணைந்து ஜோடியாக தோன்றியது

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை தங்கள் வசம் ஈர்க்க பிரபல முன்னணி சேனல்கள் அனைத்துமே கையில் எடுக்கும் பொதுவான நிகழ்ச்சி சீரியல்கள் தான். டிவி சேனல்களில் பல ஆண்டுகளாக மாறாமல் தொடர்ந்து வரும் ஒரே விஷயமும் சீரியல்கள் தான். சென்டிமென்ட், குடும்பம், காதல் என்ற ட்ராக்கில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சீரியல் திரைப்படங்கள் பாணியில் அதிரடி, ஆக்ஷன், காமெடி, பள்ளி மற்றும் கல்லூரி வாழ்கையை குதூகலமாக காட்ட துவங்கியதால் வயதானவர்களை மட்டுமே பார்க்க கூடியவை சீரியல் என்ற பிம்பம் மாறி, இளைஞர்களும் பார்க்க துவங்கினர்.

    தினமும் சீரியல்கள் மூலம் வீடு தேடி வந்து மகிழ்விக்கும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர் வட்டம் மிக அதிகம். அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகையாக மாறினார் பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன். இதே சீரியலில் சுந்தர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகர் மதன் பாண்டியன். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடி இல்லை என்றாலும் நிஜ வாழ்வில் இருவரும் காதல் உறவில் இணைந்தனர்.

    இந்த ஆண்டின் துவக்கத்தில் தாங்கள் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்தனர். அதிகாரப்பூர்வமாக இருவரும் காதலர்கள் என்று ரசிகர்களுக்கு தெரிந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக துவங்கிய அபி டெய்லர்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நிஜ வாழ்வில் காதலர்களாக இருந்த ரேஷ்மா - மதன் இருவரும் அபி டெய்லர்ஸ் மூலம் சீரியலில் ஜோடியாக ஆனார்கள்.

    திருமண வாழ்வில் ஜோடி சேரும் முன்பே இருவரும் சின்னத்திரையில் இணைந்து ஜோடியாக தோன்றியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இருவரும் தங்களது இன்ஸ்டா மூலம் நவம்பர் 15 (இன்று) தங்களது திருமணம் நடைபெற உள்ள சந்தோஷ செய்தியை ரசிகர்களிடம் ஷேர் செய்து கொண்டனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by nithi (@madhanreshma_admirer)






    இன்ஸ்டாவில் அறிவித்தபடி ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியனின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக இன்று நடந்தேறி இருக்கிறது. இவர்கள் தங்களது அதிகாரபூர்வ இன்ஸ்டா ஐடி-க்களான reshma_muralidaran_official மற்றும் madhanpandian ஆகியவற்றின் ஸ்டோரியில் தங்களது திருமண கொண்டாட்டங்கள் அடங்கிய போட்டோஸ் மற்றும் வீடியோஸை அப்லோட் செய்து இருக்கிறார்கள். ரீலை தொடர்ந்து ரியலாக ஜோடியாகியுள்ள ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன் தம்பதியருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து கொண்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: