கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் மதன் மற்றும் ரேஷ்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா ஒரு முக்கிய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
சீரியல் நடிகை ரேஷ்மா, முன்னதாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களில் ஒன்றான` பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி ரோலில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். மேலும் இந்த சீரியலில் மதன் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார். பின்னர் அந்த சீரியல் முடியும் தருவாயில் இருந்தபோது தான் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி தங்களது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்தனர். பின்னர், இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அபி டெய்லர் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மகள்களுக்கு உலகை சுற்றி காட்ட நீரில் மிதக்கும் அபார்ட்மெண்ட் வாங்கிய பெற்றோர்!
ஒரு சீரியல் ஹிட்டாவதற்கு அதில் வரும் நடிகர்களும் ஒரு காரணம். அந்த வகையில், நடிகை ரேஷ்மாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்று நடத்திவரும் நிலையில், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அடிக்கடி பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்படுகிறார் சிறந்த நடன கலைஞரான ரேஷ்மா முரளிதரன், சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார்.
தற்போது அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா டெய்லர் ரோலில் தனது கணவர் மதனுடன் சேர்ந்து நடித்து வரும் நிலையில் மீண்டும் ரேஷ்மா ஜீ தமிழ் பக்கம் செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, ஜீ தமிழ் பூவே பூச்சூடவா குழு மீண்டும் இணைந்து புது சீரியல் நடிக்க இருப்பதாகவும் அதில் ரேஷ்மா நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுக் குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.
எது சான்றோனுக்கு அழகு? கம்பன் வரி நின்று விளக்குகிறார் மணிகண்டன்
ஒருவேளை அப்படி ரேஷ்மா பழையதை மறக்காமல் தாய் வீடான ஜீ தமிழுக்கு மீண்டும் சென்றால் அபி டெய்லர் சீரியல் நிலைமை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை இரண்டையும் சேர்த்து மேனேஞ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியலில் மதன் ரேஷ்மாவுடன் இணைந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.