ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Rithu Rocks Rithvik: ’வேல் ராஜும் நான் தான், சரண்யாவும் நான் தான்’ - வைரல் வீடியோ ரித்விக்குடன் சிறப்பு நேர்க்காணல்!

Rithu Rocks Rithvik: ’வேல் ராஜும் நான் தான், சரண்யாவும் நான் தான்’ - வைரல் வீடியோ ரித்விக்குடன் சிறப்பு நேர்க்காணல்!

ரிது ராக்ஸ் ரித்விக்

ரிது ராக்ஸ் ரித்விக்

கோயம்புத்தூரை சேர்ந்த ரித்விக் ரிது ராக்ஸ் எனும் தனது யூ-ட்யூப் சேனலில் பல கெட்டப்புகளில் நடித்து அசத்துகிறான். சமீபத்தில் அவனது ரிப்போர்ட்டர்ஸ் கலட்டா எனும் வீடியோ இணையத்தில் வைரலானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ’ரிப்போர்ட்டர்ஸ் கலாட்டா’ என செய்திவாசிப்பாளரையும், செய்தியாளரையும் மையப்படுத்திய வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாகியது. அதில் செய்தி வாசிப்பாளர் சரண்யா, செய்தியாளர் தன்ராஜ், வேல்ராஜ் என வெவ்வேறு கெட்டப்புகளில் கலாட்டா செய்திருந்தான் சிறுவன் ரித்விக். அவனுடன் நியூஸ்18 தமிழ் நடத்திய நேர்க்காணலின் உரையாடலை இங்கே குறிப்பிடுகிறோம்.

  ஹாய் ரித்விங் உங்களின் வீடியோ ரொம்ப வைரல் ஆகியிருக்கிறது தெரியுமா?

  ம்ம்ம்ம்.... தெரியுமே. 10,000 சப்ஸ்கிரைபர்ஸுக்கு மேல போய்டுச்சு.

  எப்படி இருக்கு உங்களுக்கு?

  ரொம்ப ஹேப்பியா இருக்கு.

  உங்க சொந்த ஊர் எது? என்ன படிக்கிறீங்க?

  என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். ரெண்டாவது படிக்கிறேன்.

  யூ-ட்யூப் ஆரம்பித்து எவ்வளவு நாளாகிறது? யார் உங்களை வழி நடத்துகிறார்கள்?

  என்னோட யூ-ட்யூப் ஆரம்பிச்சு ஒரு 2 வாரம் இருக்கும். இதெல்லாம் செய்யணும்ன்னு எங்கப்பா ஜோதிராஜ் தான் சொல்லி தர்றாரு. அம்மா பேர் ஆஷா.

  இதில் இன்னும் ஏதேனும் புதுமையாக செய்யணும் என ஐடியா இருக்கிறதா?

  ம்ம்ம்... இருக்கு, ஒரு விண்வெணி வீரர் மாதிரி ஒரு வீடியோ போடணும்.

  ஊடகத்தில் இருக்கும் எங்களை எல்லாம் கலாய்ச்சு இருக்கீங்க?

  எங்கப்பா தான் அப்படி சொல்லிக் கொடுத்தாரு. நான் என்ன பண்ணட்டும்? அவர் சொன்னத தான் நான் கேக்கணும்.

  படிச்சு முடிச்சு என்னாகணும்ன்னு ஆசைப்படுறீங்க?

  ஒரு விண்வெளி வீரரா ஆகணும்ன்னு ஆசை இருக்கு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்த வீடியோவில் குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி சில விஷயங்கள் பண்ணனும்ன்னு ஐடியா இருக்கா?

  காமெடி பண்ணனும்ன்னு தான் ஐடியா இருக்கு. இது எல்லாத்தையும் அம்மாவும், அப்பாவும் தான் சொல்லிக் கொடுத்து, என்னை டைரக்ட் பண்றாங்க. எப்படி சொல்லணும்ன்னு நடிச்சும் காட்டுவாங்க.

  வீடியோவில் இறங்கிட்டீங்க, படிக்க நேரம் இருக்கும்ன்னு நினைக்கிறீர்களா?

  கொஞ்சம் நேரம் இருக்கும். படிக்கணும், இல்லைன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க.

  வீடியோவை பார்த்து விட்டு உங்க ஃப்ரெண்ட்ஸ் என்ன சொன்னாங்க?

  நல்லாருக்கு, சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க, கமெண்ட்ஸும் அப்படித்தான் வருது.

  இன்னும் அதிகமான வீடியோக்களை எதிர் பார்க்கலாமா?

  ம்ம்ம்... எதிர் பார்க்கலாம்.

  வீடியோ வைரலாகிடுச்சு... நீங்க வெளியில் போகும் போது உங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்களா?

  ம்ம்.. தெரியல. எங்க வீட்டு பக்கத்துல இருக்கவங்க முதல்ல பாத்தாங்களான்னு தெரில.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Viral Video