வெள்ளித்திரையில் குடும்பப்பாங்கான நடிப்பில் பல நாயகிகள் 80 மற்றும் 90 களில் கொடிகட்டிப் பறந்தனர். மிகையில்லாத இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் ரேகா. கேரளாவைச் சேர்ந்த நடிகை ரேகா, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். சமீபத்தில் இவருடைய மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட வேண்டும் என்ற வரிசையில், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் R வரிசை கதாநாயகிகளில் அறிமுகமானவர் நடிகை ரேகா, வெற்றிப்பட நாயகியாக பல ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு ரஜினி, கமல், விஜயகாந்த் சத்யராஜ், பிரபு என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல வெற்றி படங்களில் நாயகியாகவும் இருந்தார். 90 களில் பல்வேறு புதுமுகங்கள் அறிமுகமான பிறகு, அது வரை கொடிகட்டிப் பறந்த நடிகைகள் பலரும் கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் இருந்து விலகிக் கொண்டனர். ரேகாவும் திருமணம் குழந்தை என்று செட்டில் ஆனார்.
இதையும் படிங்க.. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார், பல்வேறு திரைப்படங்களை நாயக நாயகிகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேகாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை.
இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!
இடையில் சில ஆண்டுகளாக ரேகா எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த போது,
விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டார். மறுபடியும் இப்போது ஆக்டிவாக நடித்து வருகிறார், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்குகிறார். இவருடைய குழந்தைகளை பற்றி நிறைய தகவல் வெளியாகாத நிலையில், பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொள்ளும் போது அம்மாவுக்கு தைரியத்தைக் கொடுத்து ரேகாவின் மகள் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. இரண்டு வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதால் அப்போது அது பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால் இவ்வளவு அழகான மகள் மற்றும்
ரேகாவுக்கு இவ்வளவு பெரிய மகளாக என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவருடைய மகள் அழகாக, பெரிய பெண்ணாக வளர்ந்துள்ளார். நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு ரேகாவை போல முக ஜாடை இருக்கிறது. இவருடைய மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார் மற்றும் திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு வேளை, திரைப்படங்களில் நடிக்க விருப்பப்பட்டால், தமிழ் திரையுலகிற்கு அழகான நாயகி கிடைக்கக்கூடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.