• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Roshni Haripriyan: 'பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி - காரணம் இது தான்!

Roshni Haripriyan: 'பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி - காரணம் இது தான்!

ரோஷினி ஹரிபிரியன்

ரோஷினி ஹரிபிரியன்

மாடலிங்கில் இருந்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாக கிடைத்தது தான்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியேறியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது.

    இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி இதிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

    கடைசியாக கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23) படப்பிடிப்புக்கு வந்த அவர், அன்றோடு விடை பெற்றுக் கொள்வதாகக் கூறி கிளம்பிவிட்டாராம். ஏற்கனவே இதில் அகிலாக நடித்து வந்த அகிலன் சினிமாவில் நடிக்கும் காரணத்தால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார்

    Roshni Haripriyan quits Vijay TV Bharathi Kannamma serial, Vijay TV Bharathi Kannamma, roshni haripriyan, roshni haripriyan quits bharathi kannamma, பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன், roshni haripriyan bharathi kannamma, roshni haripriyan marriage photos, roshni haripriyan phone number, roshni haripriyan salary, roshni haripriyan movie list, roshni haripriyan marriage, roshni haripriyan instagram, ரோஷ்னி ஹரிப்ரியன், ரோஷ்னி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா, ரோஷ்னி ஹரிப்ரியன் திருமண புகைப்படங்கள், ரோஷ்னி ஹரிப்ரியன் தொலைபேசி எண், ரோஷ்னி ஹரிப்ரியன் சம்பளம், ரோஷ்னி ஹரிப்ரியன் இன்ஸ்டாகிராம், roshni haripriyan wikipedia, roshni haripriyan hd images, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ
    ரோஷினி ஹரிபிரியன்


     

    வெண்பாவாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா தனது டெலிவரியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவருக்கு பதில் வேறு யாராவது மாற்றப்படுவார்களா? அல்லது வெண்பாவின் ட்ராக் இல்லாமல் கதை நகருமா என்ற கேள்விக்கு இப்போது வரை பதிலில்லை.

    இந்நிலையில் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக, சினிமா வாய்ப்புகள் தான் காரணம் என சிலர் கூறுகிறார்கள். மாடலிங்கில் இருந்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாக கிடைத்தது தான். அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த பின்பு பல சினிமா வாய்ப்புகள் தனது வீட்டுக் கதவை தட்டினாலும், அதற்கு அவர் அமைதியையே பதிலாக தந்துக் கொண்டிருந்தார் ரோஷினி.

    Roshni Haripriyan quits Vijay TV Bharathi Kannamma serial, Vijay TV Bharathi Kannamma, roshni haripriyan, roshni haripriyan quits bharathi kannamma, பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன், roshni haripriyan bharathi kannamma, roshni haripriyan marriage photos, roshni haripriyan phone number, roshni haripriyan salary, roshni haripriyan movie list, roshni haripriyan marriage, roshni haripriyan instagram, ரோஷ்னி ஹரிப்ரியன், ரோஷ்னி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா, ரோஷ்னி ஹரிப்ரியன் திருமண புகைப்படங்கள், ரோஷ்னி ஹரிப்ரியன் தொலைபேசி எண், ரோஷ்னி ஹரிப்ரியன் சம்பளம், ரோஷ்னி ஹரிப்ரியன் இன்ஸ்டாகிராம், roshni haripriyan wikipedia, roshni haripriyan hd images, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ
    ரோஷினி ஹரிப்ரியன்


    இதற்கிடையே பெரிய பேனர்களில் இருந்து பேசிய சிலர், சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்தாலும், ரசிகர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கண்ணம்மா பாத்திரம் தானே நினைவுக்கு வரும்? ஹீரோயின் அல்லது இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும், உங்களின் சீரியல் கதாபாத்திரம் கண்முன் வந்து போகுமே, எனக் கூறியிருக்கிறார்கள்.

    இதனால் சில காலமாகவே குழப்பத்தில் இருந்த ரோஷினி, தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விலகியதற்கு அதிகாரப்பூர்வமக இன்ஸ்டாகிராமில் ஏதேனும் காரணம் சொல்கிறாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: