Home /News /entertainment /

நிலைமை பிச்சைக்காரரை விட மோசம்... விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய ராகவேந்திரன் புலி

நிலைமை பிச்சைக்காரரை விட மோசம்... விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய ராகவேந்திரன் புலி

ராகவேந்திரன் புலி

ராகவேந்திரன் புலி

காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் தற்போது அதிலிருந்து விலகியதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தன்னுடைய நிலைமை பிச்சைக்காரரை விட மோசமாக இருப்பதாக விஜய் டிவி-யின் காற்றுக்கென்ன வேலி தொடரிலிருந்து விலகிய ராகவேந்திரன் புலி குறிப்பிட்டுள்ளார்.

    சின்னத்திரை சீரியல்களில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு தான். சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான கதாநாயகன் நாயகி மற்றும் வில்லன் உட்பட சீரியலில் தொடர்ந்து வரும் துணைப்பாத்திரங்களும் அவ்வபோது மாற்றத்துக்கு உள்ளாகும். சீரியல் கதைக்களம் ஹிட் ஆகவில்லை என்றாலோ ரசிகர்கள் அதை விரும்பவில்லை என்றாலோ, திரைக்கதை ஆசிரியரையும் டைரக்டரையும் மாற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது ஒருபுறமிருக்க ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி சீரியலின் ஹீரோ மாற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த சீரியலில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரனும் விலகியிருக்கிறார்.

    விஜய் டிவி-யில் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடரில் புலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ராகவேந்திரன். அவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகியதாக தெரிகிறது.

    இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். தொடக்கத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்தேன். ஆனால் இப்போ வரைக்கும் அப்படியேத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாரும் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. அதற்காக நானும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை. இதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம். இன்னமும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

    நான் 15 நாட்கள் ஷூட்டிங் போனால் 2 அல்லது 3 நாட்கள் தான் சீனில் காண்பிக்கிறார்கள். அதுவும் சில நேரங்களில் செட் பொருளாக இருந்திருக்கிறேன். சீரியலுக்கு கூப்பிடும் போது நீங்க தான் எல்லாம் என்று சொல்வார்கள். ஆனால் போக போக நம்ம கேரக்டர் என்ன ஆகும் என்று நமக்கே தெரியும். 2 மாதத்திற்கு முன்பு ஒரு மாத சம்பளம் ரூ.6000 வாங்கினேன். யோசித்து பாருங்கள் அதை வைத்து எப்படி என் குடும்பத்தை நடத்துவது.

    பின் ஒரு நாளைக்கு 3500 ரூபாய் தான் என்னுடைய சம்பளம். பிச்சைக்காரன் கூட என்னைவிட அதிகமாக சம்பாதிப்பான். யூ-டியூப்பில் பலர் கெட்ட வார்த்தை பேசி பிரபலமாக இருக்கிறார்கள். என்னை பொறுத்தவதை சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பவர்கள் ரொம்பவே பாவம். சம்பளம் கிடையாது, நல்ல கேரக்டரும் கிடையாது, நிம்மதியும் இருக்காது. பலரின் குமுறல்களை் தான் சொல்கிறேன்.




    காற்றுக்கென்ன வேலி தொடரில், மாறன் கேரக்ரில் நடித்து இருந்தேன். அந்த கேரக்டர் ட்ராக் மாறுதுன்னு எனக்கு நல்லவே தெரியுது. அந்த கேரக்டர் இல்லை என்றாலும் சீரியல் எவ்வித பாதிப்பையும் சந்திக்காது என்பதை தெரிந்துகொண்டேன். இதனால் நம்மை தூக்கிவிடுவார்கள் என்று எனக்கே தெரியும். அதோடு பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டமாக உள்ளது. இன்னமும் நடிக்கனும் என்கிற எண்ணத்தை மட்டும் நம்பியிருந்தால் எதுவுமே பண்ண முடியாது. அதனால் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி