• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா ‘ரோஜா’ சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இதுவா?

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா ‘ரோஜா’ சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இதுவா?

வெங்கட்

வெங்கட்

’சீரியல்ல ஹீரோவா பண்ண விரும்பறேன். தம்பி கேரக்டர்ல நடிச்சிட்டிருந்தா, தொடர்ந்து அந்த மாதிரி கேரக்டர்களாகவே அமையுது'ன்னு சொன்னார்.

  • Share this:
    சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் இருந்து வெங்கட் ரங்கநாதன் விலகியது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

    விஜய் டிவி-யின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் வெங்கட் ரங்கநாதன். அதோடு சன் டிவி-யின் ‘ரோஜா’ தொடரில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இத்தொடரில் இருந்து விலகினார்.

    இதற்கான காரணம் குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. கொரோனாவுக்கு பிறகான உடல்நிலையே தனது வெளியேற்றத்துக்குக் காரணம் என வெங்கட் கூறினாலும், உள்ளுக்குள் வேறு விஷயம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    'ரோஜா’ சீரியலில் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை, அந்த சீரியலின் ப்ரோமோக்களில் தன் முகத்தைக் கூட காட்டுவதில்லை. ரோஜா அஸ்வினை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா தான் ரசிகர்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது, என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் வெங்கட்.

    ஆனால் ரோஜா சீரியலின் தயாரிப்பு தரப்போ, ’ஆரம்பத்திலேயே அஸ்வின் கதாபாத்திரம் லீட் இல்லை என்பதை அவரிடம் சொல்லி தான் கமிட் செய்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரெஸ்ட் தேவைப்படுவதாகக் கூறினார். ஆனாலும் அவருக்கு ஏற்றபடி தேதிகளை ஒதுக்கினோம். பின்னர் ’சீரியல்ல ஹீரோவா பண்ண விரும்பறேன். தம்பி கேரக்டர்ல நடிச்சிட்டிருந்தா, தொடர்ந்து அந்த மாதிரி கேரக்டர்களாகவே அமையுது'ன்னு சொன்னார். அவர் கரியரை மனசுல வச்சி தான் இப்படி சொல்றாருங்கறதால ஏத்துக்கிட்டோம்.

    பொதுவா எல்லா ப்ரோமோலயும் லீட் கேரக்டர்ஸை தான் காட்டுவாங்க. மக்களும் அவங்கள பாக்க தான் விரும்புவாங்க. ரோஜா சீரியல்லயும் இதை தான் ஃபாலோ பண்ணினோம்’ என்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: