Home /News /entertainment /

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பிக் பாஸ் வீட்டில் வெற்றியாளர் ராஜுவுடன் அதிகம் இருந்தது இமான் அண்ணாச்சி தான். ஆனால் இந்நிகழ்சியின் இறுதி போட்டிக்கு அவர் வரவே இல்லை.

    ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் பெரிதும் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட ஒன்றாகும். இதுவரை 4 பிக் பாஸ் சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் நடந்து முடிந்தது. இந்த சீசனில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில் இறுதி சுற்றுக்கு 5 பேர் மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் போலவே இந்த முறையும் போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தது.

    கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் இறுதியாக ராஜீவ், பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமிருந்தனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வந்தது. யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தபோது, மக்களுக்கு அதிகம் பிடித்த ராஜீவ் வெற்றி கோப்பையை வாங்கினார். இவருக்கு அடுத்ததாக பிரியங்கா ரன்னர் அப் ஆகியுள்ளார்.

    இதற்கு மக்களின் ஓட்டுகள் தான் அடிப்படை அம்சமாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையிலே பல ஓட்டு வித்தியாசங்கள் இருந்துள்ளது. ராஜீவ் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்ததால் தான் பிக் பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளராக முடிந்தது. இதன்மூலம் ரூ. 50 லட்சம் ரொக்க பரிசையும், பிக் பாக் கோப்பையையும் வென்றுள்ளார். பிக் பாஸ் முடிந்த நிலையில் இனி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இவரை மீண்டும் எதிர்பார்க்கலாம்.

    முன்னணி சேனலின் புதிய சீரியலில் ஸ்வீட்டி? பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு குட் பை?

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வெற்றியாளர் ராஜுவுடன் அதிகம் இருந்தது இமான் அண்ணாச்சி தான். ஆனால் இந்நிகழ்சியின் இறுதி போட்டியின் முடிவில் அண்ணாச்சி வரவே இல்லை. இதை பற்றி பலர் கேட்டவண்ணம் இருந்தது. மேலும் இதுகுறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்ததால் தன்னால் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    மேலும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால், 7 நாட்கள் வரை குவாரன்டைனில் இருக்க வேண்டிய தேவை இருந்துள்ளது. எனவே படப்பிடிப்பு, டப்பிங் போன்றவற்றில் பிசியாக இருந்ததால் தன்னால் இதற்கு தனியாக நேரம் ஒதுக்க இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜீவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் இதை பற்றி கூறுவதற்கு முன் நெட்டிசன்கள் வெவ்வேறு விதமாக இதை பற்றி பதிவுகள் போட தொடங்கி விட்டனர். நல்லவேளை அண்ணாச்சி விளக்கம் அளித்ததால் இது பெரிய அளவிற்கு செல்லவில்லை. இல்லையேல் நெட்டிசன்கள் இதையே கன்டெட் ஆக்கியிருப்பார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி