• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அம்மன் சீரியலில் புதிதாக இணைந்த நடிகர் - விறுவிறுப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

அம்மன் சீரியலில் புதிதாக இணைந்த நடிகர் - விறுவிறுப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

அம்மன் சீரியல்

அம்மன் சீரியல்

கலர்ஸ் தமிழ் டிவி-யை பொறுத்த வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது

  • Share this:
தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ரவி பிரியன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வருகிறது பக்தி சீரியலான அம்மன்.

சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர்.

கலர்ஸ் தமிழ் டிவி-யை பொறுத்த வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அம்மன் பக்தி தொடரை ஒளிபரப்பி பெண்கள், தாய்மார்கள் என்று பல்வேறு தரப்பினரை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒளிபரப்பாக துவங்கியதில் இருந்து இதன் டிஆர்பி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பல வருடங்களாக சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகர் A.ரத்தின குமார் என்கிற ரத்தின ராஜ் இப்போது அம்மன் சீரியலில் இணைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசிகர்களை கவர்ந்த அம்மன் சீரியலை மேலும் மெருகூட்ட அவ்வப்போது பல புதிய கேரக்டர்களை சீரியலில் அறிமுகப்படுத்துகின்றனர். அந்த வகையில் நடிகர் ரத்தின குமார் தற்போது இந்த சீரியலில் புதிதாக இணைந்துள்ளார். வேட்டையன் என்ற கேரக்டரில் அம்மன் சீரியலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் நடிகர் ரத்தின குமார். நடிகர் ரத்தின குமார் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் பல வருடங்களாக பணியாற்றுகிறார். 1969-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவர், ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள், பகல் நிலவு, அரண்மனை கிளி, ரெக்கை கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட ஏராளமான பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியலில் கதிரேசனாக திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்து பாராட்டுகளை பெற்றதன் மூலம் சின்னத்திரையில் தனெக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். ஷரண்யா சுந்தராஜ், முகமது அசீம், சிந்து ஷியாம், மிதுன் ராஜ், பிரியா, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார்.

ஏற்கும் பாத்திரத்தில் அப்படியே பொருந்தி கச்சிதமாக நடிப்பதில் பெயர் பெற்றவர். பகல் நிலவில் மலர்விழியின் சகோதரராக நடித்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். சினேகாவின் காதலர்கள் என்ற திரைப்படத்திலும் நடித்து உள்ளார். இவர் பயணம் செய்வதை மிகவும் விரும்பும் ஒரு நபர். அதே போல விளையாட்டுகளை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் பழக்கம் உடையவர். இவரது வருகை அம்மன் சீரியலை மேலும் விறுவிறுப்பாக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: