ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரிந்து இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மனைவிக்கு வாழ்த்து சொன்ன சீரியல் நடிகர்!

பிரிந்து இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மனைவிக்கு வாழ்த்து சொன்ன சீரியல் நடிகர்!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

தனிப்பட்ட காரணங்களால் தினேஷூம் ரச்சிதாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களம் இறங்கியுள்ள ரச்சிதா மகாலட்சுமிக்கு அவரின் கணவர் தினேஷ் இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விட்டது. இந்த முறை 20 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதில் ஜி.பி.முத்து தொடங்கி பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , மெட்லி ஒலி சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்ட ராஜேஷ், நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் வரை 20 போட்டியாளர்களையும் முதல் நாள் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

  நேத்து ராத்திரி எம்மா.. ஜிபி முத்து டான்ஸூக்கு அமுதவாணன் இப்படி சொல்லிட்டாரே!

  இதில் சிலருக்கும் பிக் பாஸ் வருவதற்கு முன்பே ஆர்மிகள் தொடங்கப்பட்டு விட்டன. சிலருக்கு சோஷியல் மீடியாவில் பயங்கர ஃபேன் ஃபாலோவர்ஸூம் உண்டு. அந்த வகையில் பிக் பாஸில் 6வது போட்டியாளராக என் ட்ரி கொடுத்தவர் சீரியல் நடிகை ரச்சிதா. பெங்களூரை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்பு அந்த தொடரில் இணைந்து நடித்த தினேஷை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் ரச்சிதா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். தினேஷூம் ரச்சிதாவும் இணைந்தும் ஒருசில சீரியல்களில் நடித்தனர்.

  மாடல்.. ஐடி ஊழியர்.. பிக்பாஸ் போட்டியாளர் ஷிவின் கணேசன் பற்றிய தகவல்கள்!

  இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் தினேஷூம் ரச்சிதாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தினேஷ் உறுதி செய்து இருந்தார். ஆனால் எங்கள் பிரிவு தற்காலிகமானது தான், காலம் தான் இதற்கான விடையை கொண்டு வரும் என கூறி இருந்தார். சமீபகாலமாக ரச்சிதா சின்னத்திரையில் சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார். இவர் நடித்து வந்த சீரியல் சமீபத்தில் பாதியிலே முடிக்கப்பட்டது. இப்போது பிக் பாஸ் பயணத்தை ரச்சிதா தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Dinesh Gopalsamy (@dinesh_srivi)  இந்நிலையில் ரச்சிதாவுக்கு அவரின் கணவர் தினேஷ் வாழ்த்து கூறியுள்ளார். தனது இன்ஸ்டாவில் ரச்சிதாவின் புகைப்படத்தை ஷேர் செய்து அதில் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் பலரின் இதயங்களை வென்று வர வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். என்னதான் பிரிந்து இருந்தாலும் ரச்சிதாவுக்கு முன்வந்து வாழ்த்து சொல்லிய தினேஷை ரசிகர்கள் பாராட்டிய கையோடு இருவரும் விரைவில் சேர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, TV Serial, Vijay tv