Vijay TV Raaja Paarvai: திருமணம் முடிந்த கையோடு மீண்டும் விஜய் டிவி-யில் பிரபல நடிகை!

Vijay TV Raaja Paarvai: திருமணம் முடிந்த கையோடு மீண்டும் விஜய் டிவி-யில் பிரபல நடிகை!

ராஷ்மி ஜெயராஜ்

வெளிமாநிலங்களில் இருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், ரக்‌ஷாவும், ராஷ்மியும் மாற்றப்பட்டனர்.

  • Share this:
திருமணம் முடிந்த கையோடு, புதிய சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி-யில் ரீ எண்ட்ரியாகிறார் நடிகை ராஷ்மி ஜெயராஜ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், "நாம் இருவர் நமக்கு இருவர்". இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் முதல் பாகத்தில் செந்தில், ரக்‌ஷா ஹொல்லா, ராஷ்மி ஜெயராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் செந்தில். அதில் டாக்டரான அரவிந்த் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தாமரை என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மி ஜெயராஜ் நடித்திருந்தார்.

Bigg Boss Tamil: சோம் சேகர் கொடுத்த பார்ட்டி – ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள்!



ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு பெரும்பாலான சீரியல்களில் மாற்றம் நிகழ்ந்ததைப் போலவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் மாற்றம் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், ரக்‌ஷாவும், ராஷ்மியும் மாற்றப்பட்டனர். அதோடு கதையும் முற்றிலுமாக மாற்றப்பட்டு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் ரிச்சு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ராஷ்மி. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளார். ராஜபார்வை எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி சந்திரலேகா தொடரின் நாயகன் முனாஃப் ரஹ்மான் ஹீரொவாக நடிக்கிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: