முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சத்தம் இல்லாமல் விஜய் டிவி விஜே ரம்யா செய்த சாதனை... இனி அவர் ஆங்கர் மட்டுமில்லை!

சத்தம் இல்லாமல் விஜய் டிவி விஜே ரம்யா செய்த சாதனை... இனி அவர் ஆங்கர் மட்டுமில்லை!

விஜய் டிவி ரம்யா

விஜய் டிவி ரம்யா

நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்றுள்ளார்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல தமிழ் நடிகையும், வீடியோ ஜாக்கியுமான ரம்யா சுப்ரமணியன், ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளராக மாறியிருப்பதாக அறிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்றுள்ளார். தற்போது இவர், மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முழுமையாக வழிநடத்துவதற்கும் அவர் தகுதியானவர்.

மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள நடிகை, "2 வருட சரியாக தூக்கமில்லாமல், வாராந்திரம் மாடியூல் படிப்பது, பணிகளைச் செய்வது, நேரடி பயிற்சி அழைப்புகள் மற்றும் படப்பிடிப்பு / வேலை / பயணம் மற்றும் வாழ்க்கைக்கு இடையில் வந்த ஒவ்வொரு தேர்விலும் தகுதி பெறுதல் அகியவற்றை செய்தேன்... இறுதியாக, நான் இப்போது சான்றளிக்கப்பட்ட 'ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளர்' என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "கடவுள், அம்மா, அப்பா, அன்பான நண்பர்கள் மற்றும் என் அன்பான இன்ஸ்டா ஃபேமிலி, நான் தேர்வு எழுதும் ஒவ்வொரு முறையும் எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்தியவர்கள் ஆகியோருக்கு நன்றி!" குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோய்களின் போது அவருக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது. ​​​​ஒரு நண்பர் அவளிடம் நியூயார்க்கை தளமாகக் கொண்ட கல்வி நிறுவனத்தில் படிப்பை செய்ய பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து பகிர்ந்த அவர், " ஆரம்பத்தில் இது உற்சாகமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு பல சவால்கள் இருந்தன. பல கடின உழைப்புக்குப் பிறகு, இன்று இந்தச் சான்றிதழ் என் கைவசம் உள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்போது நான் ஒரு சான்றளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளராக இருக்கிறேன், " என நடிகை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

மேலும், இந்த செய்தி குறித்து நிகில்முருகானந்தம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, " நடிகையும் பிரபல வி.ஜே-வுமான நடிகை ரம்யா நியூயார்க்கில் உள்ள ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துக்கான நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக இப்போது சான்றிதழ் பெற்றுள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் சான்றிதழ் பெற்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ரம்யா ஈர்த்திருக்கிறார். 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவருக்கு 'ஃபிட்னஸ் ஃப்ரீக்' என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் இவருக்கு உண்டு. அதன் வெளிப்பாடு தான் இந்த பயிற்சியாளர் சான்றிதழ் என பெருமிதம் கொள்கிறார் ரம்யா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv