Home /News /entertainment /

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ரம்யா பாண்டியன்... இது தான் காரணமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ரம்யா பாண்டியன்... இது தான் காரணமா?

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான ரம்யா பாண்டியன் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்துள்ளார்.

  பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக யார் வருவார் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட பிக்பாஸ் ஐந்து சீசன்களின் வெற்றியாளர்கள் தவிர அனைத்து பெயர்களும் குறிப்பிடப்பட்டது. இதில் ஓவியா, யாஷிகா ஆனந்த் மற்றும் லாஸ்லியா ஆகிய மூவரின் பெயரும் பலமுறை குறிப்பிடப்பட்டது. யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வதற்கு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டாஸ்க் செய்ய முடியாது என்பதால் போட்டியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகவும் நேரடியாக தெரிவித்துவிட்டார்.

  ஓவியா மற்றும் லாஸ்லியா இருவரும் குவாரண்டைனில் இருக்கிறார்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வருவார்கள் என்று பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான ரம்யா பாண்டியன் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்துள்ளார்.

  ரம்யா பாண்டியன் பிக் பாஸ் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு என்ட்ரி ஆனார். நேற்று ஜாலியான ஆரம்பித்த பரமபதம் டாஸ்க் பரபரப்பான கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது ரம்யா பாண்டியன் என்ட்ரி ஆனார். ரம்யா வைல்டு கார்டாக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சக போட்டியாளர்களுக்கு ரம்யா வைல்டு கார்டா அல்லது கெஸ்ட்டா என்று குழப்பமாக இருந்தது.

  பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். சீசன் நான்கில் இவர் டாப் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ரம்யா பாண்டியன் பிக்பாஸ் போட்டியாளர்கள் இல்லையே மிகவும் ஜாலியான நபர் என்று அறியப்பட்டவர் அதே நேரத்தில் இவர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூற வேண்டிய நேரத்தில் சுருக்கென்று அதே சமயத்தில் நாசுக்காகவும் தெரிவித்து விடுவார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் ரம்யா பாண்டியனை குழந்தை மருத்துவர் என்று நையாண்டி செய்துள்ளார். காரணம், சிரித்துக் கொண்டே குழந்தைகளுக்கு ஊசி போடுவது போல தன்னுடைய கருத்தை தைரியமாக சொல்லிவிடுவார்.

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

  தற்போது சீசன் 4-ல் இருந்து, சுரேஷ், அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய நால்வரும் உள்ளனர். இதில் பாலா மற்றும் ரம்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியன் அனைவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு, அனிதாவிடம் அவருடைய விளையாட்டு தவறு, தனிப்பட்ட விளையாட்டில் கவனம் செலுத்துமாறு தெளிவாகக் கூறினார். அதேபோல மற்ற போட்டியாளர்களிடம் எவ்வளவு வெளிப்படையாகப் பேசுவார் என்பது தெரியவில்லை.

  நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...  இதற்கு முன்பு சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டுக்குள் வந்த பொழுது எல்லோரிடமும் வெளியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது யாருக்கு கெட்ட பெயர் இருக்கிறது என்பதெல்லாம் சூசகமாக சொன்னார். அதேபோல ரம்யா பாண்டியனும் மற்றவர்களிடம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரம்யா பாண்டியன் வந்தது முதலே டாஸ்க்குகள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருப்பதால், போட்டியாளர்கள் அமர்ந்து பேசுவதற்கு நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி ரம்யா வைல்டு கார்டு போட்டியாளர் தானா என்று இன்னும் பார்வையாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதைத் தீர்க்கும் வகையில் அவருடைய சோசியல் மீடியா கணக்கில், நான் போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறேன் எனக்கு உங்களுடைய ஆதரவு தேவை என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

  எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil

  அடுத்த செய்தி