Home /News /entertainment /

கொரோனா சிகிச்சையில் கமல்... பிக் பாஸை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்?

கொரோனா சிகிச்சையில் கமல்... பிக் பாஸை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்?

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

2019-ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை விருந்தினராக தொகுத்து வழங்கினார் ரம்யா. எனவே, நிகழ்ச்சி மற்றும் அதன் ஃபார்மட் குறித்து அவருக்குத் தெரியும்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

    இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தெரிவித்தார். இதனால் தன்னை மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் கமல். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் அடுத்ததாக தொகுத்து வழங்குவார்களென்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

    அதே நேரம் கமலின் உடல்நிலை சீராக இருப்பதால், மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ கான்பரென்சிங் மூலம் அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நாளை மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    ”2019-ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை விருந்தினராக தொகுத்து வழங்கினார் ரம்யா. எனவே, நிகழ்ச்சி மற்றும் அதன் ஃபார்மட் குறித்து அவருக்குத் தெரியும். கமல் உடல் நலம் தேறி வருவதால், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சேனல் தரப்பில் ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளனர். ஏற்கனவே விஜய் டிவி-யின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ள அவர், அவர்களுடன் நட்புரீதியான உறவைக் கொண்டுள்ளார். அதோடு அவருக்கு பிக் பாஸ் குறித்த முன் அனுபவம் இருப்பதாலும், இந்த வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்க ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளனர் பிக் பாஸ் குழுவினர்” என நம்பத் தகுந்த வட்டாரம் ஆங்கில ஊடகத்தில் தெரிவித்திருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Ramya krishnan

    அடுத்த செய்தி