Home /News /entertainment /

மருத்துவமனையில் இருந்து பேசிய கமல்ஹாசன்.. பிக் பாஸை இனி தொகுத்து வழங்க போவது இவர் தான்!

மருத்துவமனையில் இருந்து பேசிய கமல்ஹாசன்.. பிக் பாஸை இனி தொகுத்து வழங்க போவது இவர் தான்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக யார் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. மேலும் கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது.

    அதேபோல, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்ற வதந்திகளும் பரவின. மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்திகளும் வெளிவந்தன. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 55ம் நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மிக காலத்தாமதமாக முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தாலும் பலரின் கணிப்புபடி நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதன்படி, வெளியான முதல் ப்ரோமோவின் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசுகிறார்.

    அவர் அதில் கூறியதாவது, " வணக்கம்! மக்களை நோக்கி, மருத்துவமனையில் இருந்து உங்களுடன் பேசுவது உங்கள் நான்" என்று சொன்னவுடன் போட்டியாளர்கள் வணக்கம் கூறிவிட்டு சீக்கிரம் குணமடைய வேண்டும் என தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், " எந்த தொய்வுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவிக்கிறார். உடனே, பிக்பாஸ் மேடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி கொடுக்கிறார். அதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.



    இவர் கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்று அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகியுள்ளார். இதனிடையே, இந்த வாரம் 6 பேர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இமான் அண்ணாச்சி, நிரூப், பாவனி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, தாமரை, ஐக்கி பெர்ரி ஆகியோர் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களில் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பட்டியலில் இடம் பெற்றுள்ள 6 பேரில் தாமரைச்செல்வியும், ஐக்கி பெர்ரியும் தான் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரில் ஐக்கி பெர்ரி தான் இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி