• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராமாயணம் சீரியலின் ராவணன் திடீர் மரணம்!

ராமாயணம் சீரியலின் ராவணன் திடீர் மரணம்!

ராவணன்

ராவணன்

ராமாயணத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார்

  • Share this:
    ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்து வந்த அரவிந்த் திரிவேதி காலமானார்.

    இதிகாச தொடரான ‘ராமாயணம்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

    ராமாயணத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார் அரவிந்த் திரிவேதி. அதோடு 300-க்கும் மேற்பட்ட இந்தி, குஜராத்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்த இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம்.



    திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த் திரிவேதி, கடந்த 1991-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருந்தவர். இவரின் மறைவுக்கு ‘ஓம் சாந்தி’ என பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அரவிந்த் திரிவேதியின் சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: