திரைப்படங்களில் பாகம் ஒன்று பாகம் இரண்டு என்று வெளியாவது போல பல்வேறு சீரியல்களிலும் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருகின்றன. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் ஹிட்டடித்த சீரியல்களும் உள்ளன. அந்த வரிசையில் 90-களில் கிளாசிக் நகைச்சுவை தொடர் என்று பெரிய வரவேற்பைப் பெற்ற ப்ளாக்பஸ்டர் சீரிசான ரமணி vs ரமணி தொடரின் மூன்றாம் பாகம் தற்போது வெப்சீரிஸாக ஒளிபரப்பாக இருக்கிறது.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், திரைப்படங்களில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் மக்களுக்கு நெருக்கமாக உணர்ச்சி பூர்வமான, தரமான பல்வேறு வெற்றிப் படைப்புகளை இயக்கியுள்ளார். உறவுகளுக்கு நடக்கும் போராட்டம் உணர்ச்சி பூர்வமான போராட்டம் பற்றிய பெரும்பாலான சீரியல்கள் இருந்தாலும், நகைச்சுவை கதைகளிலும் சிகரமாகத் திகழ்ந்தார்.
தொண்ணூறுகளில் ஹிட்டடித்த கிளாசிக் நகைச்சுவை தொடர் என்று இப்போது வரை பாராட்டப்படும் ரமணி vs ரமணி சீரியல் மூலம், சீரியல்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தவர் இயக்குனர் சிகரம். இதன் இரண்டு பாகங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அது மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களில், இதே போன்ற நகைச்சுவை சீரியல்களிலும் அதற்கு பிறகு வரவே இல்லை என்று கூறலாம்.
ஒரே மாதரியான சென்டிமென்ட், பழிவாங்கும் டிராமா, திடீரென்று வில்லனாக மாறுபவர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே பாணியான கதைதான் பல சீரியல்களில் உள்ளன. சீரியல்களில் ஏதேனும் புதிதாகக் கதைகளும் அல்லது வேறு களத்திலோ, நகைச்சுவையாக, த்ரில்லராக ஏதேனும் சீரியல்கள் வராதா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல செய்தியாக ரமணி வெர்சஸ் ரமணி மீண்டும் மூன்றாம் பாகம் தொடங்கவிருக்கிறது என்ற செய்தி சில வாரங்களுக்குமுன் வெளியாகியது.
Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?
ரமணி வெர்சஸ் ரமணி மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை சின்னத்திரையில் ஒளிபரப்பாகவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது. எந்த சேனலில் ரமணி vs ரமணி ஒளிபரப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், இந்த முறை சின்னத்திரையில் ஒளிபரப்பாகவில்லை, இது ஒரு வெப் சீரிஸாக வெளிவர இருக்கிறது என்ற தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு பக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்
இந்த மூன்றாம் பாகத்தில் ராம்ஜி மற்றும் வாசுகி ஆனந்த் இருவரும் ரமணிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவருமே சின்னத்திரை ரசிகர்களுக்கு பழகிய முகங்கள் தான். இருவருமே 90-களில் வெளியான பல ஹிட் சீரியல்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமணி vs ரமணி ஆஹா ஒரிஜினல் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார். இதன் முதல் எபிசோட் மார்ச் 4 ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.