Home /News /entertainment /

சீரியல் ஆடிஷனுக்கு போய் திருப்பி அனுப்பப்பட்ட பிக் பாஸ் ராஜூ!

சீரியல் ஆடிஷனுக்கு போய் திருப்பி அனுப்பப்பட்ட பிக் பாஸ் ராஜூ!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பத்தில் ஆடிஷனுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ராஜூ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஜீவா மற்றும் கதிர் ரோலுக்காக ஆடிஷன் சென்ற விஷயத்தை ரியாலிட்டி ஷோவில் பதிவு செய்து இருக்கிறார்.

    பிக் பாஸ் வீட்டில் முதல் நாளிருந்து பலரின் கவனத்தையும் பெற்ற ஸ்க்ரிப்ட் ரைட்டர் ராஜூ ஜெயமோகன் விஜய் டிவி ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையமானவர். ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு  ராஜூவுக்கு கிடைத்தது .கதைப்படி,  ராஜூ வெளிநாடு சென்றுவிட்டார் என்று மாற்றப்பட்டது. பிக் பாஸ் முடிந்த பின்பு ராஜூ சீரியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராஜூ அடுத்த லெவலுக்கு சென்றார்.



    சன் டிவியில் மீண்டும் பூவரசி.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதனால் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஏற்கெனவே ராஜூ கூறி இருந்தார். சமீபத்தில் வெளியான டான் படத்தில் கூட ராஜூ நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். வெள்ளித்திரையில் ராஜூவை அதிகம் பார்க்கலாம் என நினைக்கையில் மீண்டும் விஜய் டிவி அவருக்கு வாய்ப்பு வந்தது. பிபி ஜோடிகள் 2  நிகழ்ச்சியில் ஆங்கராக களம் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது ’ராஜூ வீட்ல பார்ட்டி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

    குக் வித் கோமாளி அம்மு அபிராமிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்!

    இதில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் போன வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் ராஜூ வீட்ல பார்ட்டி நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அதில் தனம் அண்ணி, ஜீவா, கதிர், மூர்த்தியிடம் ராஜூ பல கேள்விகளை கேட்டு அவர்கள் சொல்லும் பதிலை வைத்து அவர்களை கலாய்த்து தள்ளி இருந்தார்.



    அந்த வகையில் ஜீவா மற்றும் கதிரிடம் பேசிய ராஜு தானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பத்தில் ஆடிஷனுக்கு வந்ததாக கூறியுள்ளார். எப்போதுமே கடுமையாக உழைக்கக்கூடிய உழைப்பாளி ரோல் என இயக்குனர் சொன்னதால் உயிரை கொடுத்து நடித்து காட்டினாராம். ஆனால் கடைசியில் கேமராமேன் கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு, எக்ஸ்ப்ரஷன் வரவில்லை என கூறி ராஜூவை ரிஜட் செய்து விட்டாராம். அதற்காக ராஜூ லைட்டா ஃபீல் செய்தாராம். அதன் பின்பு சீரியலில் கதிரை நடிப்பை பார்த்ததும் அவரும் நம்மள மாதிரி தான நடிக்கிறார் என்ன மட்டும் ஏன் வேண்டாம்ன்னு சொன்னாங்கன்னு நினைச்சாராம். ராஜூ இதை சொல்லி முடித்ததும் மொத்த அரங்கமும் கைத்தட்டி சிரிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Pandian Stores, Vijay tv

    அடுத்த செய்தி