Home /News /entertainment /

பிக் பாஸ் : ஒரு கேள்வியில் மொத்த ஆதரவையும் இழந்த ராஜூ - அப்படி என்ன கேட்டார்..

பிக் பாஸ் : ஒரு கேள்வியில் மொத்த ஆதரவையும் இழந்த ராஜூ - அப்படி என்ன கேட்டார்..

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

raju jeymohan : ராஜூவுக்கு ஆதரவாக இருப்பது போல் தாமரை பேசியது கோபத்தின் ஒருபடி மேல் எரிச்சல்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  ராஜூவா இப்படி கேட்டாரு? ராஜூவா இவ்வளவு மோசமா நடந்து கொண்டாரு?ன்னு சமூகவலைத்தளங்களில் கதறிக் கொண்டிருக்கின்றனர் பிக் பாஸ் ராஜூ ஜெயமோகன் ரசிகர்கள். எல்லாத்துக்கும் காரணம் அபிநயிடம் ராஜூ கேட்ட அந்த ஒரு கேள்வி தான். எந்த வாயால் இத்தனை நாட்களாக ரசிகர்களை கவர்ந்து வந்தாரோ இன்று அதே வாயால் ராஜூவுக்கு சனி விளையாடி விட்டது.

  ஒரு திருமணம் ஆன நபர் மற்றொரு திருமணம் ஆன, குழந்தை இருக்கும் நபரை பார்த்து பொது வெளியில் எல்லோர் முன்னிலையிலும் இப்படி ஒரு கேள்வியை கேட்டது பல்வேறு விமர்சனத்திற்கு காரணமாகி விட்டது. நேற்றைய எபிசோடுக்கு பிறகு பலரும் ராஜூ ஆர்மியில் இருந்து வெளியேறியுள்ளனர். ராஜூ பேசியது தவறு என்றால், அதை ஆதரித்து பேசிய தாமரை மீது ரசிகர்கள் அதை விட கொல காண்டில் இருக்கின்றனர்.

  பிக் பஸ் வீட்டில் 54 வது நாளில் truth or dare விளையாட்டு வைக்கப்பட்டது. டைனிங் ஏரியாவில் நடத்தப்பட்ட இந்த டாஸ்கில் பாட்டில் சுற்றி யார் முன்பு நிற்கிறதோ அவர்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்வியை ஒரு நபரை பார்த்து கேட்க வேண்டும். இந்த டாஸ்கில் தான் ராஜூவுக்கு சனி வாயில் தாண்டவம் ஆடியது. ராஜு முன்பு பாட்டில் சுற்றி நிற்க, அவர் அபிநய்யை பார்த்து ”நீங்க பாவனியை லவ் பண்றீங்களா” என கேட்டார். கண்டிப்பாக இந்த கேள்வி பாவனி, அபிநய்-க்கு மட்டுமில்லை ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸூக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு என்பது போல் அபிநய் ஒரு ரியாக்‌ஷனை கொடுத்து விட்டு என்னடா இப்படி கேக்குற? கண்டிப்பா கிடையாது என்றார். கேமாக இருந்தாலும் ஒரு நாகரீகம் வேண்டாமா? என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

  இதே சட்ட திட்டம் பேசிய ராஜூ தான், தாமரையின் காயினை ஸ்ருதி எடுத்த போது, கேம் தான் இருந்தாலும் நாகரீகம் வேண்டாமா? கேமரா இருக்கு இப்படியா நடந்து கொள்வது என்றார். அப்படியென்றால் டைனிங் ஏரியாவில் கேமரா இல்லையா? இல்லை இந்த டாஸ்க் ரசிகர்களுக்கு காட்டப்படாதுன்னு அவரே முடிவு எடுத்து விட்டாரா? அபிநய் முந்தைய நாள் தான் தனது காதல் மனைவிக்கும், மகளுக்கும் லெட்டர் எழுதுவதாக கூறியிருந்தார். அப்படி இருக்கையில் ராஜூவின் இந்த கேள்வி அபிநயின் மனைவி மற்றும் மகளை எப்படி பாதிக்கும் என்பதை ராஜூ அந்த செகண்ட் யோசிக்க மறந்துட்டாரோ?

  இந்த கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு ராஜூ கொடுத்த விளக்கம், மனசில் பட்டதை கேட்டு விட்டேன் இந்த பிக் பாஸ் வீட்டில் அப்படி தானே இருக்க வேண்டும் என்றார். அப்படி என்றால் இதே கேள்வியை வருண் - அக்‌ஷராவை பார்த்தும், நிரூப் - பிரியங்காவை பார்த்தும் கேட்கும் தைரியம் ராஜூவுக்கு இருக்கிறதா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு தோன்றுகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் அதிகப்படியான ஆதரவு ராஜூவுக்கு தான் இருந்தது. அவரின் மிமிக்ரி, நகைச்சுவை திறன், நக்கல் பேச்சு, ஒழுக்கம் எல்லாமே கமல்ஹாசனால் அதிகம் பாராட்டப்பட்டது. ஓவர் புகழ்ச்சி ராஜூவை இப்படி மாற்றிவிட்டதோ?

  இந்த கேள்வியை கேட்ட பின்பு ஐக்கி மற்றும் அக்‌ஷரா, ராஜூவிடம் நீ செய்தது சரியில்லை. இந்த கேள்வியை நீ கேட்டிருக்க கூடாது என்றனர். ஒருவேலை கல்யாணம் ஆகாதவர்களை பார்த்து கேட்டு இருந்தால் கூட ஓகே, இருவரின் திருமண வாழ்க்கை பற்றி உனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது கண்டிப்பாக ஒரு நேஷ்னல் தொலைக்காட்சியில் நீ இப்படி பேசி இருக்க கூடாது என்றனர். அப்போது கூட ராஜூ தவறை உணராமல், இல்லை என்று அபிநய் பதில் சொல்லி இருந்தால் இது அங்கயே முடிந்து இருக்கும் என்றார். இந்த கேள்வியை ராஜூ சந்தித்திருந்தால் அவரின் ரியாக்‌ஷன் எப்படி இருந்து இருக்கும் என்று தெரியவில்லை.

  இந்த நேரத்தில் ராஜூவுக்கு ஆதரவாக இருப்பது போல் தாமரை பேசியது கோபத்தின் ஒருபடி மேல் எரிச்சல். எனக்கே அவர்களை பார்க்கும் போது அப்படிதான் தோன்றியது என்றார். போற போக்கில் எல்லோர் மீதும் பழியை தூக்கிவிட்டு போகமுடியாது தாமரை. இதே தாமரை தான், சிபி அடக்க ஒடுக்கம் பற்றி பேசிய போது எரிமலையாக வெடித்தார். ஆனால் பாவனி என்றவுடன் ஈஸியாக அவரின் குணம் மாறிவிட்டது. கிராமம் கிராமம் என்று ஏமாற்றும் தாமரைக்கு இந்த விஷயத்தில் அவரின் ஊர்க்காரர்கள் சப்போர்ட் கூட கிடைக்கவில்லை.  இந்த விஷயத்தில் மிகவும் மெச்சூராக நடந்து கொண்டது பாவனியும் அபிநய்யும் தான். இதைப் பற்றி ராஜூவிடம் எந்த விளக்கமும் விவாதமும் செய்யாமல் ராஜூ இருக்கும் இடத்தை விட்டு ஒதுங்கியே நின்றனர். கடைசியில் பிரியங்காவின் 2 பக்கம் வசனத்திற்கு பிறகு ராஜூ ”நான் அவங்கள ஹர்ட் பண்ணி இருக்க கூடாது, கேட்டது தப்பு தான்” என்றார். இது ரொம்ப லேட் ராஜூ பாய்.

  இதுபுறம் இருக்க, ராஜூவுக்கு ஆதரவு குரல்களும் இணையத்தில் ஒலிக்கின்றன. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 10 ஆவது நாளே பாவனி இந்த கேள்வியை அபிநயிடம் கேட்டுள்ளார். அப்போது தப்பாக தெரியவில்லை. இப்போது ராஜூ கேட்ட பின் தப்பாக தெரிகிறதா? என்கின்றனர். அதுமட்டுமில்லை ராஜூவின் கேள்வியில் எந்த தப்பும் இல்லை என்றும், வெறும் 1 மணி நேர எபிசோடை வைத்து நாம் எந்த முடிவும் எடுக்க முடியாது,நாள் முழுவதும் அவர்களை பார்பது ராஜூ தான் எதோ ஒரு இடத்தில் அவருக்கு அப்படி தோன்றியதால் தான் இந்த கேள்வியை வெளிப்படையாக கேட்டுள்ளார் என்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி