ராஜுபாய் என்கிற ஹேஷ்டேக்கின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் களைக்கட்டிய நகைச்சுவை வீடியோ கிளிப்புகளின் வழியாகவே பிக் பாஸ் சீஸன் 5-யின் பக்கம் ஒரு பெருங்கூட்டமே திரும்பியது என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால்.. ஐ யம் சாரி, உங்கள் எண்ணம் தவறு!
கடந்த 4 சீஸனில் ஒரு எபிசோடை கூட முழுதாய் பார்க்காத பலரும், கத்தி-கத்தி சண்டை போடுவதையும், அடித்துக்கொள்வதையும் பார்க்க பிடிக்காத சிலரும் கூட சீஸன் 5-யின் அனைத்து எபிசோட்களையும் பிளேபேக் செய்து செய்து பார்க்க ஒரே காரணம் - ராஜு பாய் தான்!
ராஜுக்கு அடுத்த படியாக, பிக் பாஸ் 5 ஷோவில் 'ஃபன்' செய்தது யார் என்று கேட்டால் பலர் அண்ணாச்சியின் பெயரை சொல்லலாம். ஆனால் இறுதி வரை தாக்குப்பிடித்த பிரியங்காவே அதிக பேரின் இரண்டாவது தேர்வு ஆகும்!
அதனால் தான் அவர் பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் விஜய் டிவி தொலைக்காட்சியின் பெரிய ஹிட்டாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 பற்றிய பேச்சுக்கள், கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இன்னும் முடிந்த பாடில்லை.
முன்னரே குறிப்பிட்டபடி, பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியில் அதிக வாக்குகள் பெற்று நம்ம ராஜு பாய் பிக் பாஸ் டைட்டிலை வென்றார், அவரை தொடர்ந்து பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார்.
பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரியங்கா, ஒரு தந்திரவாதி, கோர்த்து விடுவதில் கில்லாடி, வாய் பேசி பேசியே மற்றவர்களை 'ட்ரிகர்' செய்வதில் கை தேர்ந்தவர் என்கிற பெயர்களை பெற்றாலும் கூட, கடைசி வாரங்களில் மிகவும் அன்பானவர், ஒரு அப்பிராணி, இவர் இயல்பே இப்படித்தான் என்கிற சர்டிபிக்கேட்களை வாங்கி தள்ளினார்.
இதையும் படிங்க.. ரோஜா சீரியல் நடிகையின் தாய் பாசத்தை கண்டு பூரித்து போன ரசிகர்கள் கூட்டம்!
வனிதாவை போல ஆரம்பம் முதல் எண்டு கார்டு வரை ஒரே மாதிரி, பிரியங்கா இல்லாமல் போனதற்கு பிக் பாஸும் ஒரு காரணம் தான். கடுப்பு கிளப்புற மாதிரி அல்லது சண்டை , போட்டி போடுற மாதிரி ஏதாச்சும் டாஸ்க் கொடுத்தால் தானே!?
எட்டு வேளையும் ஸ்நாக்ஸ், சாப்பாடு, அதை விட்டால் 'ஜீலி' செய்வது என்று ஹாலிடே வெக்கேஷன் போல இருக்க விட்டு விட்டால் எவர் தான் தன் சுய ரூபத்தை வெளி காட்டுவார்கள், முடிந்த வரை நல்ல பிள்ளையாக தான் இருப்பார்கள். அதை தான் பிரியங்காவும் செய்தார், வெற்றியும் பெற்றார்.
இதையும் படிங்க.. விஜய் 67 படத்தை இயக்குகிறேன் - இயக்குனரின் விக்கிபீடியா தகவலால் பரபரப்பு!
இந்நிலையில் பிரியங்கா தனது யூடியூப் சேனல் வழியாக தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதே ஒரு சவாலான விஷயம் தான். போவதற்கு முன்பு பலரும் வேண்டாம் என்று கூறினார்கள். இருந்தாலும் நான் இதில் கலந்து கொள்ள வேண்டும், பிரியங்கா எப்படி என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது, இப்போது எனக்கு கிடைத்திருக்கும் வெற்றி உங்களால் கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv