• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டாக்டரை பின்னுக்குத் தள்ளிய ரஜினிகாந்தின் படையப்பா டி.ஆர்.பி!

டாக்டரை பின்னுக்குத் தள்ளிய ரஜினிகாந்தின் படையப்பா டி.ஆர்.பி!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் எப்போதும் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கிங் என்கிறார்கள் ரசிகர்கள்.

  • Share this:
    தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த புத்தம் புதிய திரைப்படமான "அண்ணாத்த" வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பிரபல மற்றும் முன்னணி யூ-ட்யூபர்களின் கலவையான மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் படம் ரிலீசான சில மணி நேரங்களிலேயே சோஷியல் மீடியாக்களில் தீயாக பரவியது. இதனை தெடர்ந்து டைரக்டர் சிவா மற்றும் அவரது அண்ணாத்த படம் நெட்டிசன்களால் மிகவும் ரோஸ்ட் செய்யப்பட்டது.

    அண்ணாத்த படம் பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளிவரும் ரசிகர்களின் ரிவ்யூக்களும் கலவையாகவே இருந்து வருகிறது. ஒரு தரப்பினர் அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கொண்ட படத்தில் மிகவும் முக்கியமான இடத்தை அண்ணாத்த பெற்று விட்டதாக கூறி கண்ணீர் மல்க பேச, இன்னும் சிலர் பல அண்ணண் - தங்கை செண்டிமெண்ட் கொண்ட திரைப்படங்களை மிக்ஸ் செய்து அண்ணாத்த என்ற பெயரில் தலையில் மிளகாய் அரைத்து உள்ளார் சிவா என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்கள்.

    விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் எப்போதும் போல சூப்பர் ஸ்டார் கிங் என்பதை வசூல் நிரூபித்து விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். இதனிடையே ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் மற்றொரு தரமான தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. இந்த தீபாவளியின் போது சாதனை படைத்துள்ளது அண்ணாத்த மட்டுமல்ல 22 வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான "படையப்பா" திரைப்படமும் தான்.

    தீபாவளியை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல முன்னணி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. அதே போல தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்னர் அக்டோபர் 31 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30-க்கு சன் டிவி-யில் ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. தீபாவளியன்று சன் டிவி-யில் ஒளிபரப்பான சிவகார்த்திகேயன் நடித்த புத்தம் புதிய திரைப்படமான டாக்டர் URBN TRP 20.4 , URBAN + RURAL TRP 16.82 , PREMIERE TRP 13.1 என்ற அளவில் ரேட்டிங் கிடைத்துள்ளது.

    படையப்பா திரைப்படம் ஒளிபரப்பான போது சன் டிவி-யின் TRP ரேட்டிங் URBAN + RURAL செக்மென்டில் 17.75-ஆக இருந்துள்ளது. இந்த இரு திரைபடங்களின் ரேட்டிங்கையும் ஒப்பிட்டுள்ள ரசிகர்கள், வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற ரம்யாகிருஷ்ணனின் வசனத்தை மேற்கோள் காட்டி டிரெண்டாக்கி வருகின்றனர். புதிய திரைப்படமான டாக்டரை விட அதிக TRP பெற்றுள்ளதையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் தீபாவளிக்கு ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் அதிக TRP ரேட்டிங் பெற்ற திரைப்படம் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: