ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் பார்த்திபன் - ரஜினி கல்யாணத்திற்கு பிறகு சீரியல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜினி சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் உள்ளது. ஆரம்பத்தில் இந்த சீரியலின் புரமோவை பார்த்த ரசிகர்கள், இந்த சீரியலின் கதை, சன் டிவியின் கயல் சீரியல் கதையுடன் பொருந்தி போவதாக கலாய்த்து இருந்தனர். இதனால் இந்த சீரியல் ஆரம்பத்தில் சில ட்ரோல், மீம்ஸ்களை சந்தித்தது. ஆனால் போக போக கதையின் வேகம், திரைக்கதையின் ட்விஸ்ட் ரசிகர்களை கவர, தற்போது பலரும் ரஜினி சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணமா?
இதில் லீட் ரோலில் ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார்.குடும்பத்துக்காக வாழும் ரஜினி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார். தங்கை, தம்பி, அம்மாவுக்காக எல்லா ஆசைகளையும் மறைத்து கொண்டு அவர்களின் நலனுக்காகவே வாழும் நல்ல உள்ளம் ரஜினி. அவருக்கு பார்த்திபன் மீது காதல் உண்டு. ஆனால் அனிதாவுக்கு செய்த சத்தியத்துக்காக தனது காதலை மறைத்து கொண்டு நடிக்கிறார். இதனால் பார்த்திபனுக்கு வேற ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இதில் முழு மனதுடன் ரஜினியும் கலந்து கொள்கிறார். அதுமட்டுமில்லை கல்யாண வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்கிறார்.
கோபியை பார்த்து அப்படியொரு வார்த்தை கேட்ட பாக்கியா!
காதல் ஜெயிக்குமா? இல்லை தியாகம் ஜெயிக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். கடைசியில் காதல் ஜெயித்தது, கடைசி நேரத்தில் ரஜினிக்கு தாலி கட்டினார் பார்த்திபன். இப்படி இயக்குனர் கதையில் கொடுத்த ட்விஸ்டால் ரசிகர்கள் செம்ம ஹாப்பி. அவர்களும் ரஜினி - பார்த்திபன் இணைய வேண்டும் என நினைத்தனர்.
இந்நிலையில் கல்யாணத்திற்கு பிறகு நடக்க போகும் அதிரடி திருப்பம் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. பார்த்திபன் ரஜினி கழுத்தில் தாலி கட்ட, அனிதாவுக்கு கோபம் தாங்கல. இதனால் அவர் பார்த்திபனுடன் சண்டை போடுகிறார். கூடிய விரைவில் நானும் ரஜினியும் சேர்ந்து வாழ்வோம் என சவால் விட்ட பார்த்திபன் ரஜினியை பார்க்க அவரின் வீட்டுக்கு போகிறர்.
அங்கு தான் ட்விஸ்டே, பார்த்திபனிடம் ரஜினியின் அம்மா, மாமா, தங்கை எல்லோரும் சண்டை போடுகின்றனர். கதவை திறந்து வெளியே வரும் ரஜினி, பார்த்திபனை பார்த்து வெளியே போ என கத்துகிறார். இதை பார்த்திபன் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பார்த்திபனை அடித்து வெளியே தள்ளுகின்றனர். அடுத்து என்ன நடக்கும் ? என்பது வரும் எபிசோடுகள் மூலம் தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.