ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சரவணன் தங்கை பார்வதி பற்றி விக்கிக்கு கிடைத்த ஆதாரம்.. சந்தியாவை மாட்டிவிட்ட அர்ச்சனா!

சரவணன் தங்கை பார்வதி பற்றி விக்கிக்கு கிடைத்த ஆதாரம்.. சந்தியாவை மாட்டிவிட்ட அர்ச்சனா!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ராஜா ராணி 2வில் மீண்டும் பார்வதி பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி கல்யாணத்தை நிறுத்த அர்ச்சனா, விக்கிக்கு உதவி செய்கிறார். எப்படியாவது பார்வதி கல்யாணம் நிற்க வேண்டும் என்பதே அர்ச்சனாவின் ஆசை.

ராஜா ராணி 2வில் மீண்டும் பார்வதி பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. பார்வதியை காதலிப்பது போல் ஏமாற்றி, பிளாக்மெயில் செய்து வந்த விக்கியை சரவணன் அடித்து ஆஸ்பிட்டலில் படுக்க வைத்தார். அதன் பின்பு விக்கி, பார்வதி விஷயத்தில் தலையிடவே இல்லை. அவரிடம் இருந்த அனைத்து ஆதாரத்தையும் சந்தியா அழித்து விட்டார். அதன் பின்பு தான் பார்வதி கல்யாணம் பேச்சு தொடங்கியது. தற்போது பார்வதி - சுந்தர் கல்யாணம் உறுதியாகிவிட்டது. இது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியாவது பார்வதி கல்யாணத்தை நிறுத்த வேண்டும், சுந்தருக்கு அவரின் தங்கையுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்.

அந்த நடிகருடன் பிக் பாஸ் ராஜூ...ரசிகர்கள் சொன்ன விஷயம் இதுதான்!

அதற்காக அர்ச்சனா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, இன்றைய எபிசோடில் அர்ச்சனா விக்கிக்கு ஃபோன் செய்கிறார். எப்படியாது பார்வதி கல்யாணத்தை நிறுத்து, அதற்கு நான் உதவி செய்கிறேன் என்கிறார். அதற்கு விக்கி, பார்வதியுடன் எடுத்துக் கொண்ட பழைய ஃபோடோக்களை ஷேர் செய்கிறார். இந்த விஷயத்தில், அர்ச்சனா இருப்பது யாருக்கும் தெரிய கூடாது என்றும் சத்தியம் வாங்கி கொள்கிறார்.

பிரபல சீரியலில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா வெண்பா?

பார்வதி கல்யாணத்தை நிறுத்த ஆதாரம் சிக்கி விட்டது என நினைத்த விக்கி, நைட் அந்த புகைப்படங்களை பார்வதிக்கு வாட்ஸப்பில் அனுப்பி அதிர்ச்சி கொடுக்கிறார். கல்யாண கனவில் இருக்கும் பார்வதி, புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆகுகிறார். இப்படி இருக்கையில், சந்தியாவை அர்ச்சனா சிவகாமி அத்தையிடம் மாட்டிவிட பிளான் போடுகிறார். சந்தியா, குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளி போடுவதாக, போலீஸ் ஆக வேண்டிய கனவில் தான் இப்படி செய்கிறார் என்கிறார். அதை சிவகாமியும் நம்பி சந்தியா மீது சந்தேகம் கொள்கிறார்.

ஃபோட்டோவை பார்த்த பயத்தில் பார்வதி பதறி போய் சந்தியாவிடம் சொல்கிறார். சந்தியா, இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். ஆனால் எந்த காரணத்திற்காவும் இந்த கல்யாணம் நிற்காது என்று பார்வதிக்கு சத்தியம் செய்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv