ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?

ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

பொய் குற்றச்சாட்டு வைத்து சரவணனை கைது செய்தனர். போதாத குறைக்கு சரவணனை பயங்கரமாக அடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் ஜெயிலுக்கு சென்று விட்டார். சந்தியாவாக ஆல்யா மானசா சென்று உடனே சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? என வழக்கம் போல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2’ ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு காரணம் ஆல்யா மானசா, இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பாவாக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரின் கணவர் சஞ்சீவ் நடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரது ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது. அது கல்யாணத்தில் முடிந்தது.பிறகு ஆல்யா மானசா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார், அதற்கு ஐலா என பெயர் சூட்டியுள்ளனர்.

read more.. Bigg Boss : என்னால முடியல.. திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை கடுமையாக கூடியதை அடுத்து பல மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்த ஆல்யா மானசா, மீண்டும் பழைய ஸ்லிம் லுக்கிற்கு திரும்பினார். அதன் பின்பு ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி

கொடுத்தார். சந்தியா என்ற ரோலில் நடித்து வந்தார். ஹீரோவாக நடிகர் சித்து, சரவணன் என்ற கேரக்டரில் சந்தியாவின் கணவராக நடித்து வருகிறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என லட்சிய கனவோடு இருக்கும் ஹீரோயின் சந்தியா, எதிர்பாராதவிதமாக சரவணனை திருமணம் செய்து கொள்கிறார், அதற்கு பின்னர் குடும்பத்தில் வெடிக்கும் குழப்பங்கள், சண்டைகள் தான் கதைக்களம். ஆரம்பத்தில் மெதுவாக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி சீசன் 2 தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆல்யா சீரியலில் இருந்து விலகினார். இதற்கு காரணம், ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கரிப்பிணியாக தொடர்ந்து சீரியலில் தனது பங்கை அளித்து வந்தார். இந்நிலையில் ஒய்வு எடுக்க சின்ன பிரேக் எடுத்துள்ளார். இவருக்கு பதிலாக சந்தியா ரோலில் நடிகை ரியா புதியதாக வந்துள்ளார். அவரை ரசிகர்கள் கூடிய விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிகிறது. ஆனால் ஆல்யாவுக்காகவே இந்த சீர்யலை பார்த்தவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்பதே உண்மை.

இதையும் படிங்க... காதலிக்கு அண்ணனுடன் திருமணம்.. ஒரு வழியா ஈரமான ரோஜாவே சீரியல் கதை தொடங்கியது!

இந்நிலையில் ராஜா ராணி 2 சிரியலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. சரவணன் ரவுடிகளை தட்டிக்கேட்டார். மாமூல் வசூலித்து மார்க்கெட்டில் அராஜகம் செய்வதர்களை தைரியமாக சரவணன் தட்டிக்கேட்க கடைசியில் அவர் கடையில் போதை பொருள் வைத்ததாக பொய் குற்றச்சாட்டு வைத்து சரவணனை கைது செய்தனர். போதாத குறைக்கு சரவணனை பயங்கரமாக அடிக்கின்றனர். விஷயம் தெரிந்து சந்தியா உடனே போய் சரவணனை பார்க்கிறார். இப்படி இருக்கையில், சரவணன் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வந்தால் இதுப்போல் பொய் வழக்குகள் குறையும் என்கிறார். தனது கணவருக்காக போலீஸ் ஆக முடிவு எடுக்கிறார் சந்தியா.

' isDesktop="true" id="721445" youtubeid="z2cfq0p70RY" category="television">

இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? ஜெயிலில் அடிவாங்கும் அளவுக்கு வந்துவிட்டதே? இதுவே ஆல்யா இருந்தால் இப்படி நடந்து இருக்குமா? என நகைக்சுவையான சில கமெண்டுகளை தெறிக்க வைக்கின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv