Home /News /entertainment /

கடைசி நேரத்தில் பார்வதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! விக்கியால் நின்றதா கல்யாணம்?

கடைசி நேரத்தில் பார்வதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! விக்கியால் நின்றதா கல்யாணம்?

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் இது பார்வதி காணும் கனவா? இல்லை உண்மையில் நடக்கிறதா?

    ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி - பாஸ்கர் திருமணம் நடக்குமா? இல்லையா? விக்கி கையில் இருக்கும் கடைசி திட்டம் என்ன? என்று இந்த வாரம் எபிசோடு முழுவதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன ​தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியலின் தமிழ் வெர்ஷன் தான் ராஜா ராணி 2. ஏற்கெனவே விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இதன் ரீமேக்கான ராஜா ராணி 2 சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் சந்தியா என்ற ரோலில் ஆல்யா மானசா நடித்து வந்தார். தற்போது 2வது குழந்தை பிறந்த காரணத்தினால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் நடிகை ரியா சந்தியாவாக நடித்து வருகிறார்.

    மிகப் பெரிய எதிர்பார்ப்பில் எதிர் நீச்சல் சீரியல்.. ஜனனிக்காக சக்தி எடுத்த முடிவு!

    தற்போது சீரியலில் விக்கி - பார்வதி காதல் பிரச்சனை, பார்வதி - பாஸ்கர் திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. விக்கியும் பார்வதியும் காதலித்தனர். ஆனால் விக்கி பற்றிய உண்மை தெரிந்ததும் பார்வது அவரிடம் இருந்து தப்பித்து விட்டார். அதன் பின்பு தான் பாஸ்கருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இப்படி இருக்கையில், அர்ச்சனா தனது தங்கைக்கு தான் பாஸ்கரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதனால் முடிந்து போன பிரச்சனையை மீண்டும் கிளப்பி விடுக்கிறார். அதாவது பார்வதியும் விக்கியும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை விக்கிக்கு அனுப்பி இதை வைத்து பார்வதியை மிரட்ட சொல்கிறார்.

    விக்கியின் மிரட்டலால் பயந்து போய் நிற்கும் பார்வதி, குடும்பத்தின் பெயர் கெட்டுபோய் விடக்கூடாது என பயப்படுகிறார். அந்த பயத்தால் விக்கி சொல்வதை செய்வதாக சம்மதிக்கிறார். அதே நேரம், தற்கொலை செய்து கொள்ளலாம் எனவும் முடிவு எடுக்கிறார். இன்றைய எபிசோடில் பார்வதி தூக்கில் தொங்கிய புடவை அறந்து விழ அவர் உயிர் பிழைத்து கொள்கிறார். அந்த நேரம் பார்த்து விக்கி ஃபோன் செய்து மிரட்ட, கோபத்தில் விக்கியை எதிர்த்து தைரியமாக பேசுகிறார். இதனால் விக்கி கோபத்தில் நாளை காலை உன் கல்யாணம் நடக்காது என சபதம் போடுகிறார்.

    பொழுது விடிந்ததும் கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, இந்த பக்கம் வில்லி அர்ச்சனா தனது தங்கையிடம் கல்யாணம் நின்று விடும் என உறுதியாக கூறி மணப்பெண் போல் தயாராக சொல்கிறார். பாஸ்கரும், பார்வதியும் மணமேடையில் வந்து அமர, நிறுத்துங்க என்ற குரலுடன் விக்கி என் ட்ரி கொடுக்கிறார். பார்வதிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    பெண்களின் ஆதர்ச நாயகன் மோகனின் 2வது ஆட்டம்!

    இது பார்வதி காணும் கனவா? இல்லை உண்மையில் நடக்கிறதா? விக்கியால் கல்யாணம் நிற்கிறதா? போன்ற பல கேள்விகளுக்கு நாளைய எபிசோடில் பதில் தெரிந்து விடும்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி