Colors Tamil: கலர்ஸ் தமிழ் ‘அம்மன்’ சீரியலில் புதிதாக இணைந்த ரஜனி!

ரஜனி பிரவீன்

அம்மன் சீரியல் மூலம் ரஜனி பிரவீன் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகிறார். அவர் தனது நடிப்பை தொடங்குவதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றினார். தியேட்டர் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.

  • Share this:
    கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் புதிதாக இணைந்துள்ளார் நடிகை ரஜனி.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி தொடர் அம்மன். இதில் பவித்ரா கவுடா அம்மனாக நடிக்கிறார். அவருடன் அமல்ஜித், நந்திதா ஜெனிபர் நடிக்கிறார்கள். பரமேஸ்வரன் என்பவர் இயக்கி வரும் இத்தொடர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

    அம்மனின் முக்கிய வில்லியான தாரா வேடத்தில் ரஜனி பிரவீன் நடிக்கிறார். தாராவாக அவர் நடிக்கும் அத்தியாயங்கள் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன. சீரியலில் தனது தோற்றத்தைப் பகிர்ந்துக் கொண்ட ரஜனி, “எனது புதிய சீரியல் தோற்றம்… அம்மன் தமிழ் சீரியலில் தாரா கதாபாத்திரமாக எனது பதிவைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொழிக்கும் எனது நடிப்புக்கும் உதவிய இயக்குநர் குழுவிற்கும், எனக்கு வசதியான சூழலை வழங்கிய தயாரிப்பு குழுவினருக்கும் பெரிய நன்றி. தமிழில் முதல் முறையாக எனது பெரிய தருணம்” எனத் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அம்மன் சீரியல் மூலம் ரஜனி பிரவீன் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகிறார். அவர் தனது நடிப்பை தொடங்குவதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றினார். தியேட்டர் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.

    மகாதேவி, ரங்கநாயகி, நாகினி, யுகலா கீதே, நிஹாரிகா மற்றும் ஹரா ஹரா மகாதேவா போன்ற கன்னட சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: