Home /News /entertainment /

என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

ராஜா ராணி 2 அர்ச்சனா

ராஜா ராணி 2 அர்ச்சனா

Raja Rani 2 Serial Archana | ராஜா ராணி 2 அர்ச்சனா ரோல். மொத்த குடும்பத்தை வீட்டில் இருந்து கொண்டே பழி வாங்கும் மோசமான மருமகள்

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி ரோலில் நடிக்கும் அர்ச்சனா பற்றி அவரின் அம்மா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சீரியல்களில் நெகடிவ் ரோல் என்பது பலராலும் கவனிக்கப்படும் ஒன்று. ஹீரோயின் அநியாயத்திற்கு அப்பாவியாக இருப்பார், அவருக்கு இன்னல்கள் தரும் மோசமான வில்லியாக கண்டிப்பாக ஒருவர் நடித்து இருப்பார். ஹீரோயினை விட வில்லியின் இம்பேக்ட் சீரியலில் பயங்கரமாக இருக்கும். சமீபகாலமாக பல நடிகைகள் வில்லி ரோலில் நடிக்க முன் வருகின்றனர். காரணம், லீட் ரோலை விட மக்களிடம் பயங்கரமான ரீச் இந்த வில்லி கதாபாத்திரங்களுக்கு தான் கிடைக்கிறது. அந்த வரிசையில் தற்போது சின்னத்திரையில் மோசமான வில்லி ரோல் ரோஜா சீரியல் அனு, ராஜா ராணி 2 அர்ச்சனா, பாரதி கண்ணம்மா வெண்பா.

    சரஸ்வதிக்கு தூக்க மாத்திரை கொடுத்த விஷயம்.. தமிழிடம் மாட்டிக் கொண்ட சந்திரகலா!

    இதில் வெண்பா ரோலை 3 ஆண்டுகளாக மக்கள் திட்டிக் கொண்டே தான் இருக்கின்றனர். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா சிரீயலில் அவரின் ரோல் வில்லத்தனத்தின் உச்சமாக காட்டப்படுகிறது. அதே போல தான், ராஜா ராணி 2 அர்ச்சனா ரோல். மொத்த குடும்பத்தை வீட்டில் இருந்து கொண்டே பழி வாங்கும் மோசமான மருமகள். இந்த 2 கதாபாத்திரங்களும் சீரியலில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களே தவிர , அது அவர்களின் ரியல் லைஃப், ரியல் கேரக்டர் கிடையாது. ஆனால் ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தின் மீது காட்ட வேண்டிய வெறுப்பை ஆஃப் ஸ்கீரினிலும் காட்டி விடுகின்றனர்.

    ராதிகாவிடம் உண்மையை சொல்ல போகும் கோபி அப்பா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன?

    இதைப்பற்றி தான் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் முன்னோட்டம் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அம்மாவும், வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவின் அம்மாவும் பேசுகின்றனர். இது குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஃபரீனா பேசுகையில், “வெண்பா ரோலை பயங்கரமாக திட்டுவார்கள். நான் நிறைமாத கர்ப்பிணியாக நடித்த போது என் குழந்தையையும் சேர்த்து திட்டுவார்கள்” என குறிப்பிடுகிறார். உடனே அர்ச்சனாவின் அம்மா, “என் மகளை யாரெல்லாம் வீட்டில் திட்டுகிறார்களோ, ஃபரீனாவுக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் வந்து விட்டது. ஆனா என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாமே ஆகணும்” என்கிறார்.



    அதாவது சீரியல் வில்லி என்பது வெறும் நடிப்பு மட்டும் தான், வெளியில் அவர்களை பார்க்கும் போது இவ்வளவு வெறுப்புகளை கொட்டாதீர்கள் என ஃபரீனாவின் அம்மா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி