முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய பிரபலம் விலகல்!

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய பிரபலம் விலகல்!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

Vijay TV Raja Rani Serial: சீரியலின் வெற்றிக்கு, நடிகர் நடிகைகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். பெரும்பாலான நடிகர் நடிகைகள் சீரியலின் பாத்திரமாகவே மாறி விடுகின்றனர்.

  • Last Updated :

வெளிநாட்டுத் திரைப்படங்களில் பார்ட் 1, பார்ட் 2 என்று எடுக்கப்படும் வழக்கம் உள்ளது. அதே போல, தமிழ் நாட்டிலும் சூப்பர் ஹிட்டாகும் படங்கள் பார்ட் 2 எடுக்கப்படுவதை ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். படங்களைப் போலவே, சின்னத்திரை ரசிகர்களுக்கும் சீரியல்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதை ரசிக்கிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான ஒரு சில சீரியல்கள், பல சீசன்கள் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டாகின. முதல் பாகத்தை விட அடுத்தடுத்த பாகங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன என்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற சீரியல்களில் ஒன்று, ராஜா ராணி 2.

சீரியலின் வெற்றிக்கு, நடிகர் நடிகைகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். பெரும்பாலான நடிகர் நடிகைகள் சீரியலின் பாத்திரமாகவே மாறி விடுகின்றனர். அதேபோல சில காரணங்களுக்காக ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போய்விடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. பல மாதங்களாக ஒரு பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அல்லது நடிகை திடீரென்று சீரியலில் இருந்து விலகிச் சென்று அவருக்கு பதிலாக மற்றொருவர் நடிப்பது ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய ஏமாற்றத்தை உருவாக்குகின்றது.

இதையும் படிங்க.. ரோட்டில் நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. மீனாவின் அப்பா இப்படி கூட செய்வாரா?

இது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கும் புதிதல்ல, சீரியல் ரசிகர்களுக்கும் புதிதல்ல. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்களில் கதாநாயகர்கள், நாயகிகள் உட்பட பல நடிகர்கள் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அந்த வரிசையில், ராஜா ராணி 2 சீரியலின் முக்கிய நடிகரும் வெளியேறியுள்ளார்.

சீரியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகையோ வெளியேறும் போது, வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதைப் பற்றிய வதந்திகள் வெளிவரத் தொடங்கும். முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். உதாரணமாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷ்னி ஹரிபிரியன் வெளியேறுவதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். ஆனால் சில பாத்திரங்கள் மாற இருக்கிறது என்பது பெரும்பாலும் பார்வையாளர்களுக்கு தெரியாமலேயே இருக்கும். சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பொதே. இனி இவருக்கு பதிலாக இவர் என்று புகைப்படங்கள் காட்டப்படும்.

இதையும் படிங்க.. valimai FDFS டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குநர்… அதற்கு அவரின் அப்பா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

ராஜா ராணி 2 சீரியலில் நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் தான் சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.ஆனால், ஆல்யா மானசாவின் அண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்  சால்சா மணி தான் மாறியுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv