Home /News /entertainment /

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ஆல்யா மீண்டும் ராஜா ராணி 2 சீரியலுக்கு வருவாரா அல்லது ரியாவே சந்தியாவாக தொடர்வாரா?

  சீரியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகையோ வெளியேறும் போது,  அவர்கள் வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதைப் பற்றிய வதந்திகள் வெளிவரத் தொடங்கும். முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். இப்படி நடக்கவில்லை என்றால் சில சமயங்களில் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்ட தகவல் சீரியல் டெலிகாஸ்ட் ஆன பின்பு தான் ரசிகர்களுக்கு தெரிய வரும். அதாவது சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பொதே. இனி இவருக்கு பதிலாக இவர் என்று புகைப்படங்கள் காட்டப்படும். ஆனால் ஆல்யா மானசா விஷயத்தில் இது எதுவுமே நடக்கவில்லை.

  ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பாவாக நடித்து ரசிகர்கள் மனதை ஆல்யா கொள்ளையடித்தார். கூடவே, அவருடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ்வும் ஆல்யாவுடன் காதலில் விழ இருவருக்கும் சிறப்பாக கல்யாணம் நடைப்பெற்றது. 1 வருடத்தில் ஐலா பாப்பா பிறக்க, பிரசவத்திற்கு பிறகு ஆல்யா கம்பேக் கொடுத்தார். சின்னத்திரையில் ராஜா ராணி 2 சீரியல் அவரின் ரீ என்ட்ரியாக் அமைந்தது. வந்த கொஞ்ச நாளிலே சீரியல் டி. ஆர்.பி ரேட்டிங் உயர ராஜா ராணி 2 சீரியல் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலாக மாறியது. இந்த நேரத்தில் தான் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்னார்.

  EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

  அந்த தகவல் வெளியானதில் இருந்து, ஆல்யா மானசா சீரியலை விட்டு விலக்குவதாக, ஆல்யா இனி சீரியல் நடிக்க மாட்டார் என ஏகப்பட்ட வதந்திகள் இந்த 9 மாதம் வரை இணையத்தில் சுற்றி சுற்றி வந்தன. ஆனால்  நிறைமாத கர்ப்பிணியாக 9 மாதம் வரை ஆல்யா சீரியலை நடித்துக் கொடுத்தார். இப்போது பிரசவத்திற்காக 3 மாதம் பிரேக் எடுக்க போவதாக கூறி சீரியலில் இருந்து திடீரென்று விலகினார். ஆனால் இதற்கு முன்பே ரசிகர்கள் அவரிடம் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுறீர்களா? என கேட்டதற்கு இல்லை என்றார். ஆனால் திடீரென்று பிரேக் சொல்லிவிட்டு ஆல்யா போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம், இவருக்கு பதில் நடிகை ரியா இனி சந்தியா ரோலில் நடிக்க போவதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

  விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?

  அதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் விஜய் டிவி,  ராஜா ராணி 2 புதிய புரமோவை வெளியிட்டுள்ளது. அதில் சந்தியாவாக ரியாவின் அறிமுகம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். காரணம் 3 மாதத்துக்கு மட்டும் தான் இந்த கதாபாத்திர மாற்றம், ஆல்யா 3 மாதம் கழித்து வந்து விடுவார் என்று தான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் தொடர்ந்து ரியாவே சந்தியாவாக நடிப்பாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இந்த புரமோ இடம்பெற்ற வீடியோவிலும் இப்படியான கருத்துக்களை அதிகம் பார்க்க முடிகிறது.
  மீண்டும் ஆல்யா தான் சந்தியா நடிக்க வேண்டும், சித்துவுக்கு அவர் தான் சரியான ஜோடி என ஆல்யாவின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆல்யா மீண்டும் ராஜா ராணி 2 சீரியலுக்கு வருவாரா அல்லது ரியாவே சந்தியாவாக தொடர்வாரா? போன்ற கேள்விகளுக்கு 3 மாதம் கழித்து தான் விடை கிடைக்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி