ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனாவின் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தை கலக்கி வருகிறது. ஏற்கெனவே பாரதி கண்ணம்மா ஹீரோ அருணுடன் காதல் வதந்தி, திருமணம் என்ற தகவல் இணையத்தில் பரவி கொண்டிருக்க அதை கலாய்க்கும் விதமாக ரீலீஸ் ஒன்றை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு இருக்கிறார் அர்ச்சனா.
சின்னத்திரையில் நுழைந்த மிக குறுகிய காலத்திலே தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவை திட்டி தீர்க்காத ரசிகர்களே இல்லை எனலாம். சீரியலில் தனது வில்லத்தனத்தால் மிரட்டி எடுக்கிறார் அர்ச்சனா. ஆல்யாவின் விலகலுக்கு பின்பு இவரின் நடிப்புக்காக இந்த சீரியலை மிஸ் செய்யாமல் பார்க்கும் கூட்டம் உள்ளது. சொல்லப்போனால் முதல் சீரியலில் சபாஷ் வாங்கி விட்டார்.
ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கப்பட்ட பெரிய பொறுப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
டிக்டாக் மூலம் ஈஸியாக சோஷியல் மீடியாவில் வைரல் ஆனவர் சில டிவி சேனல்களில் விஜேவாக பணிப்புரிந்தார். அதன் பின்பு அவருக்கு ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைக்க அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு சிக்சர் அடித்தார். இதற்காக சிறந்த வில்லி விருதையும் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கைப்பற்றினார். சமீபத்தில் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவின. அதற்கு காரணமாக அவருக்கு கல்யாணம் என்ற தகவலும் வெளியாகியது.
அதாவது விஜய் டெலி அவார்டு நிகழ்ச்சியில் டாக்டர், டி.என்.ஏ டெஸ்ட் என அர்ச்சனாவை ஆங்கர்கள் கலாய்த்ததில் தொடங்கி பாரதி கண்ணம்மா அருண் - அர்ச்சனாவுக்கும் இடையில் காதல் என கிசுகிசுக்கள் வெளியாகின. சமீபத்தில் இருவரும் காரில் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலானது. கடந்த 2 மாதங்களாக அர்ச்சனா - அருண் பிரசாத் காதல் வதந்தி சின்னத்திரையில் அனைவராலும் கிசுகிசுக்கப்படுகிறது.
வருணுடன் சேர்ந்த சக்திக்கு இப்படியொரு சோகமா! கதறி அழும் மல்லிகா
இப்படி இருக்கையில் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் ரீலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வதந்திகளை கலாய்க்கும் விதமாக, கமலின் பஞ்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ’உன்னோடு காதல் என்று பேச வைத்தது’ என்ற பாடலுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து ரீலீஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் கமெண்டில் ரசிகர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல, அருணுடனான காதல் வதந்தியா? என கேள்வி கேட்டு அர்ச்சனாவை திணற வைத்துள்ளனர். இன்னும் சிலர், ஏற்கெனவே வதந்தி போய் கொண்டிருக்கிறது அதற்கு என்ன பதில்? என அருண் பிரசாத்தை டேக் செய்து கேள்வி கேட்கின்றனர். இதுவரை பல சின்னத்திரை ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.அவர்கள் வரிசையில் இவர்களும் இணைய வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.