• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சரவணன் தங்கச்சி பார்வதியா இது? ஃபோட்டோவை பார்த்து ஷாக்கான ராஜா ராணி ரசிகர்கள்!

சரவணன் தங்கச்சி பார்வதியா இது? ஃபோட்டோவை பார்த்து ஷாக்கான ராஜா ராணி ரசிகர்கள்!

ராஜா ராணி பார்வதி

ராஜா ராணி பார்வதி

12வது படிக்கும்போதே டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தவர்.

 • Share this:
  ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் பார்வதி பள்ளிச் சீருடையில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தங்கையாக நடித்து வருகிறார் வைஷூ சுந்தர். சீரியலில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். டப்மேஷ் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான இவருக்கு, சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் ரன் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. நடிப்பு ஒருபுறம் இருக்க, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படம் பதிவிடும் வைஷூ, லேட்டஸ்டாக பள்ளிப் பருவத்தில் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  மார்டன் டிரஸ்ஸில் மட்டுமே பார்வதியை பார்த்து வந்த பலருக்கும், பள்ளிச் சீருடையில் இருக்கும் பார்வதியை பார்த்ததும், அட நம்ம பார்வதியா இது? என கேட்கின்றனர். பேன்ட் ஷர்ட், சுடிதார்களில் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்த அவர், திடீரென யுனிபார்ம் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஷார்ட் பிலிம்கள் மற்றும் பல சீரியல்களிலும் வைஷூ நடித்து வருகிறார். அவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Vaishu Sundar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vaishusundarofficial)


  தன்னுடைய நடிப்பு பயணம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டார் வைஷூ. அதில், " சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதி. பிசியோதெரபி படித்தாலும் சினிமா மீது எனக்கு ஆசை இருந்தது. அம்மா தமிழ் டீச்சர் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டார். எனக்கு இருந்த நடிப்பு ஆசை காரணமாக, டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட தொடங்கினேன். 12வது படிக்கும்போதே டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தேன். பின்னர், சினிமா ஆசையை வீட்டில் கூறியபோது, அவர்கள் சம்மதிக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒருவழியாக பிசியோதெரபி படித்து முடித்தேன். அப்போது, சினிமாவில் நடிப்பதற்கு வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்தது. அந்த நேரத்தில் யூ டியூப்பில் ஆல்பம் சாங் ஒன்றுக்காக என்னை நடிக்க கூப்பிட்டார்கள். அங்கிருந்து என்னுடைய நடிப்பு பயணம் தொடங்கியது எனத் தெரிவித்துள்ளார்.ஆல்பம் பாடலுக்குப் பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்துள்ளார். அப்போது தான் ரன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், நாயகி சீரியலில் நட்சத்திராவுக்கு தங்கையாக நடித்தார். அந்த கேரக்டர் வைஷூக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொட்டுத்தால், அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் தேடி வரத்தொடங்கின. இப்போது, பிஸியாகிவிட்டார். சூட்டிங்கிற்காக சென்னையில் தங்கியிருக்கிறார். பரவலான அறிமுகம் பெற்றிருப்பதால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் வைஷூ என்கிற பார்வதி காத்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: