• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சரவணனும் சந்தியாவும் சேர வேண்டும் என்பதற்கே அந்த கொடூர விபத்து நடந்தது போல!

சரவணனும் சந்தியாவும் சேர வேண்டும் என்பதற்கே அந்த கொடூர விபத்து நடந்தது போல!

ராஜா ராணி 2 சீரியல்

ராஜா ராணி 2 சீரியல்

சந்தியா செல்லும் பேருந்து கொடூரமான விபத்தை சந்திக்கிறது. இந்த விபத்து தான் இவரையும் இணைக்கிறது.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா- சரவணனை பயங்கரமான பேருந்து விபத்து சேர்த்து வைத்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் முழுவதும் சந்தியாவை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என நினைத்து கொண்டிருந்த சரவணன் கடைசியாக மொத்த குடும்பத்தையும் எதிர்த்து சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பி வைத்தார். சந்தியாவுக்கு விவாகரத்து வழங்க அவருக்கும் விருப்பமில்லை என்றாலும் சந்தியாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக காலமே அவர்களை சேர்த்து வைத்துவிட்டது. ஆம், சந்தியா செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. அதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

    படித்து பட்டம் பெற்ற சந்தியாவுக்கு சரவணன் உடன் சேர்ந்து வாழ தான் ஆசை. ஆனால் சரவணன் சந்தியாவின் படிப்பு, அறிவை மனதில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறான். இதற்கு மிக முக்கிய காரணம், சமீபத்தில் இருவரும் கமிஷனர் அலுவலகம் சென்று வந்தது தான். சந்தியாவின் அறிவை அங்கிருந்த காவல துறை அதிகாரிகள் பாராட்டி பேச, அதே நேரம் சரவணனை பற்றி மட்டமாக பேசுவது, என மனம் வெறுத்து போகும் சரவணனிடம் கமிஷனர் ஏன் சந்தியாவை மேற்படிப்பு படிக்க வைக்கவில்லை என கேட்ட கேள்வி தான் சரவணனின் இவ்வளவு பெரிய முடிவுக்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே சந்தியா வைத்திருந்த விவகாரத்து நோட்டீஸை காரணம் காட்டி சந்தியாவை வீட்டை விட்டு அனுப்புகிறான் சரவணன். மயிலு, சக்கர ஆகியோர் சரவணனின் காலில் விழுந்து கெஞ்சி சந்தியாவுக்காக சப்போர்ட் செய்தாலும் கூட சரவணன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அர்ச்சனாவுக்கோ பயங்கர சந்தோஷம். சந்தியா வீட்டில் இருந்து கிளம்பிட்டால் தனக்கு பிரச்சனையே இல்லை என நினைக்கிறாள். பார்வதியும் சந்தியாவின் நல்ல குணத்தை புரிந்து கொண்டு சப்போர்ட் செய்கிறாள் ஆனாலும் சரவணன் சந்தியாவை அனுப்புவதில் உறுதியாக இருந்து அதில் சாதிக்கிறான். இந்த உண்மை எல்லாம் தெரிந்த ஒரே நபர் சரவணணின் அப்பா தான். ஆனால் உண்மை சொல்ல முடியாமல் அவரின் சத்தியம் அவரை தடுத்து நிறுத்துகிறது. இந்நிலையில் சந்தியா, சரவணனின் முடிவை மனபூர்வமாக ஏற்று வீட்டுக்கு கிளம்புகிறாள்.



    அவளை வழி அனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை சரவணன் சென்று மனமே இல்லாமல் அவளை பேருந்தில் ஏற்றிவிடுகிறான். கடைசி வரை சரவணன் மனம் மாறி கூப்பிடுவான் என எண்ணிய சந்தியாவுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்த நேரத்தில் சந்தியா செல்லும் பேருந்து கொடூரமான விபத்தை சந்திக்கிறது. இந்த விபத்து தான் இவரையும் இணைக்கிறது. அந்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: