ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் வில்லியாக நடித்து கலக்கிய சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் குழந்தைக்கு காதணி விழா சமீபத்தில் நடைப்பெற்றது. வீட்டில் சிம்பிளாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் சென்றுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி
சீரியலில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு அறிமுகம் ஆன இவர், ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்திருக்கிறார்.
மற்ற சீரியலை காட்டிலும் ராஜா ராணி சீரியல் ஸ்ரீதேவிக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது
. வில்லியாக சீரியலில் கலக்கி இருப்பார். செம்பாவை பழிவாங்க இவர் போடும் பிளான்கள் அனைத்தும் கொடூரமாக இருக்கும். இந்த சீரியல் மூலம் நெகடிவ் ரோலில் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் பின்பு அசோக் சின்தலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி 2021 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார். கர்ப்பக்காலத்தில் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்தவர், குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
தொடர்ந்து சின்னத்திரையில் கவனம், செலுத்தி வருபவர், இன்ஸ்டாவில் ஆக்டிவாகவும் இருக்கிறார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீதேவின் செல்ல மகளுக்கு காதணி விழா நடைப்பெற்றது. வீட்டில் சிம்பிளாக அரங்கேறிய இந்த விழாவுக்கு ஸ்ரீதேவி சின்னத்திரை பிரபலங்களை அழைத்து இருந்தார். அவர்கள் எல்லோரும் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று குழந்தையை வாழ்த்தி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்ரீதேவி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.