சந்தியாவின் மாமியாரிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. ராஜா ராணி ரசிகர்கள் இதை எதிர்பார்க்கல!

ராஜா ராணி சீரியல்

ஒருபக்கம் விலகி போகும் கணவர், பழியை போடும் மாமியார் இதற்கு நடுவில் குத்தல் பேச்சு அர்ச்சனா. தினம் தினம் சந்தியாபாடு பெரும்பாடு.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு நாளும் உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகளுடன் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்துவருகிறது. சந்தியாவின் மாமியார் கதாபாத்திரத்தை திட்டி தீர்க்காத ரசிகர்களே இல்லை.

  தினமும் தினமும் சந்தியாவை ஏதோ ஒருகாரணத்திற்காக திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் வெளியில் மட்டும் “என் மருமகள் சந்தியா” அப்படின்னு விட்டுக்கொடுக்காம பேசுறாங்க.. ஒருவேளை மாமியார்னாலே அப்படித்தானேன்னு நினைத்து ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை பார்த்து வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்றைய எபிசோட்டில் சந்தியா சமையல் போட்டியில் ஜெயிக்கவில்லை என கோபித்துக்கொண்டு வந்தவர். இன்று சந்தியாவுக்கு ஆரத்தி எடுத்து தைலம் தேய்த்து ஷாக் கொடுக்கிறார். அதோடு, சந்தியா- சரவணுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை பற்றியும் போட்டு வாங்குகிறார். தனது மகன் சரவணன் மனமுடைந்து போயிருப்பதற்கு காரணமே நீதான் என்றும் பழியைத் தூக்கி சந்தியா மேலே போடுகிறார். ஒருபக்கம் விலகி போகும் கணவர், பழியை போடும் மாமியார் இதற்கு நடுவில் குத்தல் பேச்சு அர்ச்சனா. தினம் தினம் சந்தியாபாடு பெரும்பாடு.  போட்டியில் நடுவர்களின் மனதை வென்ற சந்தியாவால் சரவணின் உள்லத்தில் இடம்பெர முடியவில்லை. படித்த மனைவியை கண்டு விளகி நிற்கும் சரவணன், சந்தியாவை ஏற்பானா? இந்தியில் ஏற்றுக்கொண்டு மனைவியை ஐபிஎஸ் ஆக்குவது தான் கதை. தமிழில் இதை எப்படி எடுக்க இயக்குனர் பிலான் செய்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

  குடும்ப பாங்கான கதை என்பதால் மாமியார் -மருமகள் சீரியல் எப்போதுமே ஹிட் அடித்துவிடுகிறது. அந்த வகையில் இந்த ராஜா ராணி தொடர் இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த தொடராக உள்ளது.
  Published by:Sreeja Sreeja
  First published: