மருமகள் சந்தியாவுக்கே டஃப் தரும் மாமியார் சிவகாமி! இத்தனை வருஷ அனுபவம் சும்மாவா?

ராஜா ராணி மாமியார் சிவகாமி

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

  • Share this:
    ஃபோட்டோவை பார்த்து ஷாக் ஆக வேண்டாம், நீங்கள் நினைத்தது போல் விஜய் டிவி சீரியலில் மாமியார் சிவகாமியாக கலக்கி வரும் நடிகை பிரவீனா நாயர் தான் அவர்.

    விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மருமகள் சந்தியாவை வாட்டி வதைத்து ரசிகர்களால் அதிகம் வசைப்பாடப்படும் மாமியார் சிவகாமியின் நிஜப்பெயர் பிரவீனா நாயர். 18 வயதில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் , 30 வருடங்களைக் கடந்து வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கிறார். மலையாளத்தில் கௌரி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் மோகன்லால், மம்மூட்டி என உச்ச நட்சத்திரங்கள் உடனும் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

    வெள்ளித்திரையில் வெற்றி நடைப்போட்ட இவரை சின்னத்திரையும் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றது. தமிழில் முதன் முதலாக கலைஞர் டிவியின் நம்ம குடும்பம் தொடர் மூலம் அறிமுகமானார். முதல் சீரியலிலே இவரின் முகம் ரசிகர்கல் மனதில் பதிய, தொடர்ந்து விஜய்டிவி, சன்டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்தார். இவருக்கு தமிழில் சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவளே சீரியல் நல்ல பெயரை வாங்கி தந்தது.

    also read.. நிஜத்தில் அம்மாவுக்காக ’நாம் இருவர் நமக்கு இருவர்’ ஐஸ்வர்யா செய்த காரியம்!

    அதன் தொடர்ச்சியாக விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் சிவகாமியாக நடித்து வருகிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Praveena Lalithabhai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@praveenalalithabhai)






    இந்த கதாப்பாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. சீரியலில் தான் மாமியார் போன்ற பெரிய கதாப்பாத்திரம் ஆனால் நிஜத்தில் இவருக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவருடைய கணவர் பேங்க் மேனேஜர். குடும்பத்தினர் துணையுடன் பிரவீனா தொடர்ந்து தனது கலைப்பணியை செய்து வருகிறார். அதுமட்டுமில்லை இவர், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினரும் கூட. ஸ்ரீவித்யா இவருக்கு அத்தை முறை. ஒருமுறை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவரின் இளம் வயது புகைப்படங்களைப் பார்த்தால் அழகில் ஜொலிக்கிறார். கருமையான முடி, வட்ட வடி முகம் என கேரள பெண்ணுக்கு உரிய அழகில் மார்டன் ட்ரெஸிலும் கலக்குகிறார். கண்டிப்பாக இவரின் பழைய புகைப்படங்களை தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் பார்த்தால் ஷாக் ஆக தான் செய்வார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: