ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றே தகவல் இப்போது தான் பல ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. சரவணன் கடையில் வேலை செய்து வந்த செல்வம் ஒரு தீவிரவாதி. செல்வம் பற்றிய உண்மை சரவணன் தங்கை பார்வதிக்கு தெரிந்து விட்டது. அதனால் பார்வதியை கடத்தி விட்டான் செல்வம், அது மட்டுமில்லை பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சி செய்து வருகிறான். குடும்பத்தை கொன்று விடுவேன் என்று பார்வதியை மிரட்டி சம்மதிக்க வைக்கிறான். சந்தியாவுக்கு ஏற்கெனவே செல்வம் மீது சந்தேகம் வந்து விட்டது. இப்போது எப்படி பார்வதியை காப்பாற்ற போகிறார் ? என்பதை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
இதையும் படிங்க,.. முத்தழகுக்கு காத்திருந்த அதிர்ச்சி
முதலில் ராஜா ராணி 2 வில் சந்தியா ரோலில் ஆல்யா மானசா நடித்து வந்தார். ஆனால் ஆல்யாவுக்கு 2வது குழந்தை பிறந்ததால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்போது அவருக்கு பதில் ரியா தான் சந்தியா ரோலில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. பார்வதி - பாஸ்கர் கல்யாணத்தில் தொடங்கி தற்போது வரை சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க.. வருண் - அக்ஷராவுக்கு திருமணமா?
இந்நிலையில், இந்த சீரியலில் சந்தியாவின் அண்ணியாக ஜனனி ரோலில் நடிக்கும் நடிகை நிஹாரிகா இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகை நிஹாரிகா இதற்கு முன்பு பல சீரியல்களில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று இருக்கிறார். சன் டிவி, ஜீ தமிழில் இவர் நடித்த சீரியல்கள் நல்ல ரீச்சை பெற்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிறைய நெகடிவ் ரோல்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அதுமட்டுமில்லை இவர் மிகச் சிறந்த டான்ஸரும் கூட.
தற்போது ராஜா ராணி 2 வில் ஜனனி என்ற ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் பலரும் நினைத்து இருந்தனர். ஆனால் இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது என்ற விஷயம் தற்போது தான் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. இவரின் கணவரும் சின்னத்திரை பிரபலம் தான். சமீபத்தில் நிஹாரிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதைப்பார்த்து ஷாக்கான ரசிகர்கள் நிஹாரிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? சொல்லவே இல்லை! என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.