சீரியலுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது.. ராஜா ராணி புகழ் ’மயிலு’ யார் தெரியுமா?

ராஜா ராணி புகழ் ’மயிலு

ஹாட்ஸ்டாரில் வெளியான வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

  • Share this:
    அடையாளமே தெரியாத அளவுக்கு மார்டன் உடையில் நம்மளை வாவ் சொல்ல வைக்கிறார் ராஜா ராணி சீரியல் 2 புகழ் மயிலு.

    விஜய் டிவியில் சீரியல் அழகிகளின் லிஸ்ட் மிகவும் பெரியது. அதிலும் குறிப்பாக பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, மெளன ராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பீக் டைம் சீரியல்களில் நடிக்கும் பலருக்கும் ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோ. இந்த சீரியல்களில் சின்ன ரோல் நடித்தால் கூட போதும் உடனே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடலாம் போல, அந்த அளவுக்கு சின்னத்திரை, ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளது.

    குறிப்பிடும் படியாக சொன்னால், ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் வீட்டில் மயிலு கதாபாத்திரத்தில் வீட்டோட தங்கி வேலை பார்க்கும் பணிப்பெண்ணாக நடித்திருக்கும் நவ்யா சுஜி இளைஞர்களின் மனதை பெரிதும் கொள்ளையடித்து விட்டார். ஆந்திராவைச் சேர்ந்த இவரின் திரைப்பயணம் வெள்ளித்திரையில் தான் தொடங்கியது. ஆனால் சின்னத்திரையில் நடித்த முதல் சீரியலில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இன்ஸ்டாவில் இவர் போடும் ரீல்ஸ் லைக்ஸ்களை அள்ளுக்கிறது. அதுமட்டுமில்லை ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

    also read ..17 வயதில் எண்ட்ரி...லவ் பிரேக்கப்.. துவண்டு போகாமல் சிக்சர் அடித்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

    2015ஆம் ஆண்டு மிஸ் ஏபி யில் இறுதி போட்டியாளராக பங்கேற்ற நவ்யாவுக்கு வெள்ளித்திரையில் இருந்து அழைப்பு வந்தது. நடிகர் சிவா நடித்த தமிழ் 2 படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமில்லை ஹாட்ஸ்டாரில் வெளியான வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் நடித்துள்ளார். வைகை என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். எப்போதுமே மார்டன் ட்ரெஸை விரும்பும் இவருக்கு ராஜா ராணி சீரியலில் பாவடை தாவணியில் இருக்கும் வேலைக்காரி ரோல் கிடைத்தது. அதிலும் தனது வித்யாசமான நடிப்பால ரசிகர்களை கவர்ந்து விட்டார் நவ்யா. சீரியலில் இவரின் படபட பேச்சு ஆடியன்ஸூக்கு பிடித்து போக அடுத்தடுத்த சீரியலில் புக் ஆகிகொண்டிருக்கிறார்.

    இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று பார்த்தால் யாருமே நம்ப மாட்டார்கள். சீரியலுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் படு மார்டனாக கிளாஸ் லுக்கில் இருப்பார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja Sreeja
    First published: