Home /News /entertainment /

சின்சியாரிட்டிக்கு மறுபெயர் ஆல்யா.. . சொன்னது யார் தெரியுமா?

சின்சியாரிட்டிக்கு மறுபெயர் ஆல்யா.. . சொன்னது யார் தெரியுமா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யாவின் ரீ என்ட்ரிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆல்யா மானசா கூடிய விரைவில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் தெரிய தொடங்கிவிட்டன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புரமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக களம் இறங்கியவர் ஆல்யா .
    ஆல்யா ,செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் அந்த தொடரில் நடித்தார். பின்பு தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். ஆல்யாவின் கம்பேக்கை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இப்படியொரு கல்யாணமா? நட்சத்திரா கொடுத்த பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!

    இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் ஆல்யாவை நம்பி மீண்டும் ஹீரோயினாக களம் இறக்கினார். அவர் வைத்த நம்பிகையை ஆல்யா வீணடிக்கவில்லை. தனது நடிப்பால் சந்தியாவாக ரசிகர்களை கவர்ந்தார். சீரியலும் டி.ஆர்.பியில் கலக்க தொடங்கியது. சித்து - ஆல்யா காமினேஷன் ரசிகர்களுக்கு பிடித்து போக ராஜா ராணி 2 தொடர் வெற்றி சீரியல் லிஸ்டில் சேர்ந்தது. இதன் பின்பு ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமானார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகினார்.



    தற்போது அவருக்கு பதில் ரியா,  சந்தியாவாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. ஆனாலும் சின்னத்திரையில்  ஆல்யாவின் ரீ என்ட்ரிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருக்கிறார் ஆல்யா. சில நாட்களுக்கு முன்பு அவரின் யூடியூப் சேனலில் கூட கம்பேக் பற்றி ஆல்யா பேசி இருந்தார். இந்நிலையில் ராஜா ராணி 500 எபிசோடுகள் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஆல்யா வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு சின்னத்திரையில் ஆல்யா தோன்றுவது இதுவே முதல் முறை.

    'ஈரமான ரோஜாவே' ஜீவா அம்மாவா இது? ரசிகர்களுக்கு பயங்கர ஷாக்!

    ஆல்யாவுக்கு சிறப்பு வரவேற்பும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை இயக்குனர் பிரவீன் ஆல்யாவை புகழ்ந்து தள்ளுகிறார். ‘ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் ஃபர்ஸ்ட் என்றும் வொர்க்கில் பயங்கர சின்சியாரிட்டி கொண்டவர் ஆல்யா என்றும் கூறியுள்ளார். சீரியலின் அடுத்த சீசனில் அவரை களம் இறக்கினால் போதும் அவரின் சின்சியாரிட்டி தெரியும். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று நான் ஒருமுறை சொன்னால் போதும் உடனே மாடியில் இருந்து குதிக்க தயாராகி விடுவார் “ என பிரவீன் ஆல்யாவை புகழ்ந்து தள்ளுகிறார். வரும் சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி