அர்ச்சனாவால் கேள்விகுறியாகும் பார்வதியின் நிச்சயதார்த்தம்... குடும்பமே கொலை காண்டுல இருக்காங்க!

ராஜா ராணி 2

பார்வதியின் நிச்சயதார்த்ததில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்க போவது உறுதி.

 • Share this:
  ராஜா ராணி சீரியலில் அர்ச்சனாவின் சதியால் பார்வதி நிச்சயதார்த்தமே தடைப்படும் நிலைக்கு சென்றுள்ளது. ஒருவேளை கல்யாணம் நிற்கும் சூழல் வந்தால் அர்ச்சனாவுக்கு மொத்த குடும்பத்தில் மன்னிப்பே கிடையாது.


  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி2 சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இந்தி சீரியலின் ரீமேக் என்றாலும் ஆல்யா மானசாவின் நடிப்பும், சரவணனாக சித்துவின் இயல்பான நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது டாப் சீரியல் பட்டியலில் ராஜா ராணி 2 உள்ளது. சந்தியாவை பிரிந்துவிட வேண்டும் என்று சரவணன் எடுத்துள்ள முடிவு சரவணனின் அப்பாவை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது. இந்த சூழலின் சந்தியா ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த டைவர்ஸ் நோட்டீஸை வைத்து சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சரவணன் முடிவெடுத்துவிட்டான். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த உண்மையை சரவணனின் அப்பா, சந்தியாவிடம் சொல்ல முயற்சிக்கிறார் ஆனால் அதற்கும் சரவணன் முட்டுகட்டு போட்டுவிடுகிறான்.

  ஒருபக்கம் மொத்த குடும்பமும் பார்வதி நிச்சயதார்த்ததிற்கு தயார் ஆகி கொண்டிருக்க, சரவணன் மட்டும் தனியா சந்தியாவின் தோழியிடம் ரகசியமாக பேசி கொண்டிருக்கிறார். ஃபோனில் சரவணன் பேசி கொண்டிருப்பதை கவனித்த அவரின் அப்பா, சரவணனை விசாரிக்க நிச்சயதார்த்தம் முடிந்ததும் சந்தியாவை அனுப்ப இருப்பதாக கூறுகிறான் சரவணன். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இன்னொரு முறை யோசி என அறிவுருத்துகிறார். ஆனால் முடிவில் உறுதியாக இருக்கும் சரவணன், சந்தியாவை நினைத்து கஷ்டப்படுகிறான். சந்தியாவோ சரவணிடம் எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என்று ஏதேதோ செய்கிறார். சரவணிடம் பேச முயற்சிக்கிறார், சமையலறையில் போய் உதவி செய்கிறார் ஆனாலும் சரவணன் மனம் மாறுவதாக இல்லை.

  மொத்த வீடும் திருவிழா போல் இருக்க, அர்ச்சனா புடவைகளை பார்த்து கடுப்பில் புலம்பி கொண்டிருக்கிறார். எல்லாமே அவர் கடையில் எடுத்த புடவைகள் தான். மாப்பிள்ளை சுந்தர் வீட்டிலிருந்து வருபவருக்கு கொடுக்க எடுத்து வைத்திருக்கின்றனர். தங்கைக்கு வந்த மாப்பிள்ளை வரமும் போய்விட்டது. புடவையையும் சும்மாவே தூக்கி கொடுக்குறாங்கன்னு கடுப்பில் இருந்த அர்ச்சனா, சதி வேலை செய்கிறார். எல்லா புடவையில் பில் ஸ்டிக்கரை ஒட்டி மாப்பிள்ளை வீட்டாரை கோபம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் இதை கவனிக்காமல் சிவகாமி எல்லா புடவையும் வரிசையாக எடுத்து தட்டு வரிசையில் வைக்கிறார். ஒருவேளை அர்ச்சனாவின் சதியால் பார்வதி கல்யாணம் தடைப்பட்டால் கண்டிப்பாக அர்ச்சனாவுக்கு ஆப்பு நிச்சயம். ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் செந்தில் மிருகம் ஆகி அர்ச்சனாவை வீட்டைவிட்டே துரத்திவிடுவார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இத்தனையும் செய்துவிட்ட அர்ச்சனா, பார்வதி ரூமுக்கு சென்று இஞ்சி டீ கொடுக்கிறார். பார்வதி வழக்கம் போல் அர்ச்சனாவிடம் கோபத்தைக்காட்ட, அர்ச்சனா டீயை பார்வதி மீது கொட்ட முயற்சி செய்கிறார். ஆனால் அது தவறுதலாக அவர் மீதே கொட்டி விடுகிறார். நேரமே சரியில்லை என்று புலம்பி கொண்டே அர்ச்சனா அங்கிருந்து வெளியேறுகிறார். சந்தியாவிடம் எப்படியாவது உண்மையை சொல்லிவிட வேண்டும் என நினைக்கும் சரவணனின் அப்பா, சந்தியாவை தனியாக அழைத்து சரவணனுக்கு என்ன பிரச்சனை என்பதை கூற முயற்சி செய்கிறார்.  உடனே சரவணன், காப்பியை வேண்டுமென்றே கீழே கொட்டி அதை துடைக்கும்படி சந்தியாவை கூப்பிடுகிறார். சந்தியா கிச்சன் பக்கம் போனதும், தனது அப்பவிடம் சத்தியத்தை பற்றி நினைவு செய்கிறான். மொத்தத்தில் பார்வதியின் நிச்சயதார்த்ததில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்க போவது உறுதி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: