• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay TV, Sun TV: விஜய் டிவி பிரபலத்தின் நடிப்பில் சன் டிவி-யில் புதிய சீரியல்!

Vijay TV, Sun TV: விஜய் டிவி பிரபலத்தின் நடிப்பில் சன் டிவி-யில் புதிய சீரியல்!

சஞ்சீவ் கார்த்திக்

சஞ்சீவ் கார்த்திக்

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்கிறார் சஞ்சீவ். இந்த சீரியலுக்கு கயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  • Share this:
    விஜய் டிவி-யில் இருந்து சன் டிவி-க்கு தாவியுள்ளார் முன்னணி சீரியல் நடிகர் சஞ்சீவ்.

    குளிர் 100 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த சஞ்சீவ், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதில் உடன் நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற மகளும் இருக்கிறார். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையே ‘காற்றின் மொழி’ என்ற சீரியலில் நடித்து வந்தார் சஞ்சீவ். அந்த சீரியல் 331 எபிசோடுகள் ஓடிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதனால் சற்று ஓய்வில் இருந்த சஞ்சீவ், தற்போது புதிய சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த முறை விஜய் டிவி-யில் அல்ல, சன் டிவி-யில்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆம் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்கிறார் சஞ்சீவ். இந்த சீரியலுக்கு கயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சின்னதம்பி, ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌனராகம், வேலைக்காரன், காற்றின் மொழி உள்ளிட்ட சீரியல்களின் வரிசையில், கயல் சீரியலும் சினிமா டைட்டிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: