சாமிக்கு பொங்கல் வைக்க போன இடத்தில் சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ராஜா ராணி சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

ராஜா ராணி சீரியல் சந்தியா - சரவணன்

சந்தியா விடாமல் சரவணினிடம் வாக்குவாதத்தில் ஈடுப்படுகிறாள். தன்னை மறந்த சரவணன் கோபித்தில் வார்த்தையை கொட்டி தீர்க்கிறான்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் இன்று ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்.. சந்தியாவிடம் தனது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ரகசியத்தை போட்டுடைகிறான் சரவணன்.

  ராஜா ராணி 2 சீரியல் ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் இயக்குனரின் வேகமான திரைக்கதையால கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை, டி.ஆர்.பியிலும் இந்த சீரியல் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. கடந்த வாரங்களை விட வரும் வாரங்களில் சரவணன் சந்தியா சண்டை புயலாக வெடிக்க இருப்பது இன்றைய எபிசோட்டில் தெரிந்து விட்டது. குல தெய்வம் கோயிலில் பொங்கல் வைக்க சந்தியாவும் சரவணனும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். ஊருக்கு வரும் வழியிலேயே சந்தியா- சரவணனிடம் மனம் விட்டு பேச ஆசைப்படுகிறார். இருப்பினும் சந்தியாவை விட்டு விலகி செல்லும் சரவணன் இன்று தனது மனதில் இருக்கும் ரகசியத்தை போட்டுடைக்கிறான். இன்றைய எபிசோட்டில் இடம்பெறவுள்ள காட்சிகள்.

  சந்தியாவும் சரவணனும் குல தெய்வ கோயிலை நெருங்கியதும், சந்தியா சீல்லென்ற காற்று, ஆலமரம், பசுமையான வயல்வெளி இவற்றையெல்லாம் பார்த்து உற்சாகம் ஆகிறார். அப்படியே தெரியாமல் மூதாட்டி ஒருவரை இடித்து விடுகிறார். அவர் சரவணனுக்கு தெரிந்தவர் போல். உடனே இருவரையும் நலம் விசாரித்து அழகான அம்சமான ஜோடிகள் என ஆசீர்வாதம் செய்கிறார். பின்பு இருவரும் கோயிலுக்குள் சென்று அம்மனுக்கு பொங்கல் வைக்கின்றனர். முதன்முறையாக அடுப்பில் சமைக்கும் சந்தியாவுக்கு சரவணன் எல்லா உதவிகளையும் செய்கிறான். பொங்கல் பொங்கி வர வேண்டும் என மனதார எண்ணிக்கொண்டு சந்தியா பொங்கல் வைக்கிறார். அவரின் வேண்டுதல் படி பொங்கல் பொங்க இருவரும் அதை அம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.

  also read.. நீண்ட இடைவெளிக்கு பின்பு விஜய் டிவியில் வெங்கட்.. அதுவும் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சீரியலில்!

  அதுக்குள் அர்ச்சனா, தனது நாத்தனாரிடம் சந்தியா ஏன் உன்மீது அதிகம் நெருக்கம் காட்டுகிறாள் என போட்டு வாங்க ட்ரை செய்கிறாள். ஆனால் அர்ச்சனாவிடம் சிக்கி கொள்ளாமல் அவருக்கே பல்பு கொடுக்கிறார் சரவணின் செல்ல தங்கை பார்வதி. இதற்கிடையில் அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். சம்மந்தியை வரவேற்று அவர்களிடம் நலம் விசாரிக்கிறார் சிவகாமி. இந்த நேரத்தில் பார்வதியின் கல்யாண பேச்சும் அடிபடுகிறது. அந்த நேரத்தில் பார்வதிக்கு மாப்பிள்ளை ஃபோன் செய்கிறார். பார்வதியை பிடித்திருப்பதாகவும் கூறுகிறார்.

  பொங்கல் வைத்த கோயோடு சந்தியா, சரவணிடம் மனம் விட்டு பேச ஆசைப்படுகிறார். இந்த முறை சரவணனை நகர விடாமல் தன் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்கிறார். ஏன் தன்னிடம் இருந்து விலகி நிற்பதாகவும் தன்னிடம் பேசமால் இருப்பதற்கு என்ன காரணம்? என்றும் கேட்கிறார். சந்தியாவிடம் விவகாரத்து வேண்டும் என கேட்க துடிக்கும் சரவணன் அதை சொல்ல முடியாமல் தயங்குகிறான். இந்த நேரம் பார்த்து மழை வர இருவரும் மண்டபம் பக்க ஒதுங்கி நிற்கிறார்கள். ஆனால் சந்தியா விடாமல் சரவணினிடம் வாக்குவாதத்தில் ஈடுப்படுகிறாள். தன்னை மறந்த சரவணன் கோபத்தில் வார்த்தையை கொட்டி தீர்க்கிறான். இதனால் சந்தியா தேம்பி தேம்பி அழுகிறார். தனது வாழ்க்கையை விட்டு போகும்படியாக சந்தியாவிடம் சரவணன் ஆத்திரத்தில் உளருகிறான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: