• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அப்பா அம்மா ஆசைக்காக தான் இதை செய்தேன்...ராஜா ராணி ’பார்வதி’’ எமோஷ்னல் பக்கம்!

அப்பா அம்மா ஆசைக்காக தான் இதை செய்தேன்...ராஜா ராணி ’பார்வதி’’ எமோஷ்னல் பக்கம்!

ராஜா ராணி பார்வதி

ராஜா ராணி பார்வதி

12 வது படிக்கும் போதே டிக் டாக்கில் கலக்க தொடங்கி விட்டார் .

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி ரோலில் நடிக்கும் வைஷ்ணவி பற்றி பலரும் அறிந்திடாத எமோஷ்னல் பக்கம்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல டாப் சீரியல்களில் புதுமுகம் பலரையும் காண முடிகிறது. டிக் டாக், இன்ஸ்டா மூலம் கண்டறியப்பட்ட இவர்கள் குறுகிய காலக்கட்டத்தில் சின்னத்திரையில் தனக்கென தனி ஃபேன்ஸ் பட்டாளம் உருவாக்கி பிஸியாகிவிடுகின்றனர். அந்த வகையில் பார்ப்பதற்கு பேபி டால் போல் இருக்கும் ராஜா ராணி சீரியல் புகழ் பார்வதி சின்னத்திரை மூலம் இளைஞர்களை கவர்ந்து விட்டார். சன் டிவியில் தொடங்கிய இவரின் பயணம் விஜய் டிவி வந்தவுடன் பிரகாசமாக மாறிவிட்டது. அடுத்தடுத்த சீரியல்கள், ஷார்ட்  பிலிம்கள் என பார்வது ரொம்ப பிஸி. இவரின் நிஜப்பெயர் வைஷ்ணவி,

    பிசியோதெரபி முடித்த இவருக்கு சினிமா மீது தான் அதிகப்படியான காதலாம். ஆனால் இவரின் அம்மா தமிழ் டீச்சர் என்பதால் வைஷ்ணவி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 12 வது படிக்கும் போதே டிக் டாக்கில் கலக்க தொடங்கி விட்டார் வைஷ்ணவி. இவரின் சொந்த ஊர் திருப்பதி. இப்போது ஷூட்டிங்காக சென்னையில் தங்கி இருக்கிறார். முதன்முறையாக சினிமா தான் என்னுடைய ஆசை என வைஷ்ணவி வீட்டில் கூறிய போது அவரின் பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். பின்பு அவர்களுக்காக விருப்பமே இல்லாமல் பிசியோதெரபி படித்து முடித்தார் வைஷ்ணவி, அதன் பின்பு தான் அவர்கள் சினிமாவில் நடிக்க சம்மதம் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவருடைய டிக்டாக் நடிப்பை பார்த்துட்டு ஒரு யூடியூப் சேனல் ஆல்பம் சாங்கில் வைஷ்ணவியை நடிக்க கேட்க, அப்போது தான் அவரின் திரைப்பயணம் தொடங்கியது.

    மொட்டை மாடியில் வைஷ்ணவியின் ஃபோடோஷூட்


    அந்த ஆல்பம் சாங்கை தொடர்ந்து நிறைய ஆடிஷன்ல கலந்துகிட்ட வைஷ்ணவிக்கு ’ரன்' தான் முதல் சீரியல். பிறகு, அதே புரொடக்‌ஷன்ல 'நாயகி' சீரியல்ல நட்சத்திராவுக்கு தங்கையா நடித்தார். அந்த கேரக்டர் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துச்சு. அந்த கேரக்டர் பார்த்துட்டு தான் 'ராஜா ராணி'யில் நடிக்க கூப்பிட்டாங்க. இப்போது பார்வதியாக கலக்கி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: